பக்கம்:சேரர் தாயமுறை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சொர்தாயமுறை. காரணம் என்ன? ஒவ்வொரு பதிகத்தலைவனுடைய மனைவியின் தர் தையைக்கூடப் புலவர் தவறாமற் சுட்டிச் சிறப்பிப்பதாக இப்பதி கத்தொடர்களுக்குப் பொருள் கொள்ளுகிறவர்கள், அச் சேரருக்கு முன் பெரும்புகழ்படைத்துப் பல புலவராற் பாடப்பெற்ற அவர் தம் தந்தையரின் தொடர்பைமட்டும் எல்லாப்புலவரும் ஒருபடியாக மறைத்தொதுக்குவானேன்? மக்களைப் பாடும் புலவரெல்லாரும், அம் மக்களினும் புகழ்சிறந்த அவர்தம் தந்தையரை அற மறந்து ஒதுக்கி விட்டு, பெயர்சுட்டும் பெற்றிபெறாப் பெண்டிரையும், அப்பெண்டிர் பிதாக்களையும் தம் பாட்டுக்களில் மறவாமற் பாராட்டுவானேன்? போகட்டும். ஒருதலையாகப் பாடும் சேரரின் முன்னோரை மதியா மல் விட்டொழித்து, அச்சோர்காதற்பெண்டிரோடு அப்பெண்டிர் தந்தையரைமட்டுமே பழம் புலவரெல்லாரும் பாராட்டினர் என்றாவது கொள்ளக்கிடந்தாலும் ஒருவாறு அமைதிபெறலாம். உண்மையிற் புலவர் பலரும் தம் பாட்டுடைத்தலைவரின் முன்னோரை விட்டபா டில்லை. அன்ண பெருமுன்னோரைச் சுட்டி, அவர்மருகரெனப் பாட்டுடைத் தலைவர் தமை விதந்து பாராட்டிப் போக நாம் பார்க்கின் றோம். பதிற்றுப்பத்திலேயே அத்தகைய குறிப்புக்கள் பல வருகின் றன. இதனை ஊன்றிச் சிந்திக்கும் போது மக்கட்டாய முறை இக் கோச்சேரர்குடியில் இல்லாமையே இவ்வாறு சோரெல்லாம் மருக ரெனவே பாடப்பெறுதற்குக் காரணமென்று செரிகிறது. இளஞ் சேரலிரும்பொறையைப் பெருஞ் சேரலிரு'ப் பொரைன்மகனென் னாது, விறல்பாந்தரன் விறன்மருகன்' என்று பெருங்குன்றூர்கிழார் பாடத் தக்ககாரணம் இம்மருமக்கட்டாயமன்றிப் பிறிது காணல் பகுதிரு. மருகன் என்ற சொல்லின் பொருளாட்சிகள், ஊன்றிச்சிந்தித்தால், மருகன்' என்னும் சொல்லுக்கு வ தோன்றல் என்னும் பொருளே இம் மருமக்கட்டாயவழக்கால் வந் திருக்கவேண்டுமெனத் தோன்றுகிறது. மருகன் எனும் சொல், நேரே சோ தரிமகனையும், மகள் மாணவாளனையுமே குறிப்பது மரபு. அந் சேர்பொருளில் வழங்குவதோடமையாமல் அச்சொல் சிலபுலவர் செய்யுள்களில் மக்கட்டாயக்குடிகளில் வழித்தோன்றலாவாரைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/61&oldid=1444803" இலிருந்து மீள்விக்கப்பட்டது