பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 99 யான நீண்ட மேசைமேல் கண்ணாடிப் பெட்டிக்குள் ரேடியோ வைப் போலிருக்கிறது. அவளுக்குப் பரிச்சயமேயில்லாத பல பொருள்கள் பெரிய கண்ணாடி பதித்த மெருகு மின்னும் அலமாரி, சுவரில் இவனுடைய தந்தையின் முழு உருவ வண்ணப்படம் அதில் சரிகை மாலை விளங்குகிறது. சாலி கண்ணாடிப் பெட்டி மூடியைத் திறந்து டேப்பை எடுத்து ஒவ்வொன்றாகப் பார்க்கிறான். டக்டக்கென்று ஒசையிட, ஒவ்வொன்றாகப் பொருத்திச் சுழலவிட்டுப் பரிசீலனை செய்கிறான். "உனக்கு என்ன பாட்டுப் பிடிக்கும் காந்தி? புதிசா இப்ப வந்திருக்கே, அந்த சினிமாப் பாட்டு வைக்கட்டுமா?” குமிழ்களைத் திருகி அடித்து, சுழல விடுகிறான். சந்தனக்கிண்ணம், தேனின் பலா. என்று காதற்பாட்டு சுருள் அவிழ்கிறது. -- அவன் அவள் அருகில் வந்து தோளைத் தொட்டு விழுங்குபவனைப்போல் பார்க்கிறான். அவள் அவன் கைகளை விலக்க முயலுகிறாள். -- காந்தி நீ ஏன் பயப்படுற?... நா... நா... உன்னைக் காதலிக்கிறேன். உன்ன பாத்ததிலேந்து என்னால் அமைதியா இருக்க முடியல காந்தி, ஐ லவ் யூ. எங்கப்பாவிடம் சொல்லி சம்மதத்தோட கூட்டிவந்தாப்போல நினச்சிக்க. காந்தி. ஏன் பேசமாட்டேங்கற?...” காந்தியினால் பேசத்தான் முடியவில்லை. ஏதோ ருபேரலை மோதினாற்போல் பரவசமாகும் சிவிர்ப்பாகத் தோன்றுகிறது. “காந்தி. ஐ லவ் யூ, நீ ஏன் பேசாமலிருக்கிற?. காந்தி காந்தி!...” தனது வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்பம் வரப்போகிறதென்று அன்று காலையில்கூட நினைவு இல்லை. ஆனால் அவள் அவனுடைய ஆக்கிரமிப்பில் இருந்து திமிறவில்லை. திமிறும் மறுவினைகூட அவள் உடலில் நிகழவில்லை. எத்தனையோ நாட்கள் காத்திருந்தாற்போன்று அவனைச் சுவீகரித்துக்கொள்ளும் உணர்வுகளே அவள் தடைக் குரல்களை அமுக்கிவிடுகின்றன.