பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 சேற்றில் மனிதர்கள் போறப்ப, பன்னண்டு ருவாக்கி இருக்கல்ல, பூச்சி மருந்து டப்பி, அத்த ஒண்ணு வாங்கிட்டுப் போ. நா நாள மறுநாளக்கிக் கண்டிப்பா வந்திடுவேன். ஒழவத் தள்ளிப் போடாதீங்க. பூசாரியோ விருத்தாலமோ வந்து மெரட்டினாங்கன்னா, நா. வந்து பேசிக்கிறேன்னு சொல்லுங்க குடிசய இப்ப பிரிக்கிறதாத் தயங்க வானாம்.” அடுக்கிக்கொண்டே போகிறார். ஆனால் முக்கியமான முள்ளிருக்கும் இடம் தவிர்க்கிறார். திரும்பிச் செல்லு முன் அவள் வீட்டுக்கு வந்திருப்பாள். இவரும் இங்கே தங்கும் வாய்ப்பில் பொன்னடியானைக் கண்டு பேசி, இன்னும் ஒரிரு தலைவர்களையும் வைத்துக்கொண்டு எல்லாம் தீர்மானம் செய்துவிடலாம். ஐப்பசியில் கட்டிவிடவேண்டும். இவள் கைவிட்டுப் போய்விடக்கூடாது. வடிவு அவரை விட்டபின், ஒட்டலில் வந்து மூன்று ரூபாய்க்கு நன்றாகச் சாப்பிடுகிறான். சம்முகம் அவன் செலவுக்கு ஐந்து ரூபாய் கொடுத்திருக்கிறார். பூச்சி மருந்து பன்னிரண்டு ரூபாய். அது தவிர, பாம்புத் தோலுக்காக ஆறுருபாய் கிடைத்திருக்கிறது. விடுதலை மகிழ்ச்சியில சினிமாக் கொட்டகையில் வந்து உட்காருகிறான். ராஜா ராணி, தேர், குதிரை, யானை, பூதம், நாகலோகம் எல்லாம் வரும் படம். ராஜகுமாரியும் ராஜகுமாரனும் பூங்காவில் காதல் செய்யும்போது, அம்சு அருகில் இருப்பதாகவே கற்பனையில் மிதக்கிறான். வாய்மடை, வடிமடை, வரப்பு, வெட்டு, குடிசைகளின் உறுதியில்லா நிலைமை - எல்லாமே அப்போதைக்கு அவன் உலகைவிட்டு அப்பால் போகின்றன. சூனியக்காரி ராஜகுமாரியைக் கிளியாக்கிக் கூண்டில் அடைத்துவிடுகிறாள். ராஜகுமாரன் பூதத்தின் துணைகொண்டு அந்தக் கிளியைத் தேடிப் புறப்படுகிறான். வழியில் நாகலோகம். நாககுமாரி காதல் பெரிய பெரிய விடம் கக்கும் நாகங்கள் சாதுவாக இருக்கின்றன. நாககுமாரி அவற்றை ஒதுக்கி வைத்துக்கொண்டு அரசகுமாரனை உபசரிக்கிறாள். இத்தினி பாம்பையும் எப்படி வச்சிப் படம் புடிக்கிறானுவ! எல்லாத்துக்கும் பல்லைப் புடுங்கிருப்பா. ஆனாலும். ஒருக்க மட்றாசுக்குப் போயி, படம் புடிக்கிறது. ஷஅட்டிங்காமே, அதைப் பாக்கணும். என்ற ஆசை கபடம் இல்லாமல் முகிழ்த்து வருகிறது.