பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சினிமா முடிந்து வருகையில் இலேசாகத் துாற்றல் விழுகிறது. பஸ் நிறுத்தத்தில் வந்து ஒரு டீ குடித்துவிட்டு, மிட்டாய்க் கடையில் சேவும் அல்வாவும் வாங்கிக்கொள்கிறான். மீதி நான்கு ரூபாயை மடித்துப் பையில் தனியாக வைத்துக்கொண்டு பஸ்ஸுக்காகக் காத்து நிற்கிறான். "எங்க இந்தப் பக்கம்? வடிவு?..." தேவுதான் நிற்கிறான்! சர்ட்டு சராய் போட்டுக்கொண்டு, கையில் ஒரு தோல் பையுடன். "ஆ.மாங்க. தலவருக்கு உடம்பு சரியில்ல. கால்ல. வீக்கம், கூட்டியாந்து ஆசுபத்திரில காட்டிட்டு வூட்டுக்குப் போறேன்.” o "பஸ் ஆறு மணிக்கு வரணும்.” "நீங்க ஊருக்குத் தானா சாரு!” தேவு சிரிக்கிறான். "என்னப் போயி சாருமோருங்கற. நீயும் நானும் ஒண்ணாப் படிச்ச தோழர்கள் தானே, தேவுன்னு கூப்பிடறது." "அதெப்படிங்க, நீங்க ஒசரத்துக்குப் போயிட்டீங்க. நாந்தா படிக்காம ஏரப் புடிச்சிட்டேன்!” வடிவுடன் அவனும் சிரிக்கிறான். "அப்ப நீதான் உசத்தி. ஏரின் பின்னால் தான் உலகமே. உங்களைப்போன்ற தொழிலாளிக இல்லன்னா, ஏது மத்த வளமை எல்லாம்?” "அது சரி, அது உளுமதா. ஆனா யாருங்க அதெல்லாம் ஒத்துக்கிறாங்க? படிச்சி அழுக்கு ஒட்டாம வேலை செய்யிறவங்க ஆருங்க எங்களை மதிக்கிறாங்க?..." "அது யாரோட தப்புன்னு நினைக்கிற? உங்க தப்புத் தான்.” "எங்க தப்பா?...” "ஆமாம். வெறும கூலி உசத்திட்டாங்கன்னா கம்முனு பேசாம இருந்திடlங்க...” "பின்னென்ன செய்யிறது?” "பாரு, பாரு உங்களுக்கு இன்னும் என்ன இல்லைங்கறது கூட பிறத்தியான் சொல்ல வேண்டியிருக்கு. அது சரி, உன் தலைவரு மகளக் கூட்டிட்டுப் போனாரே அன்னிக்கு, எபீட்