பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 சேற்றில் மனிதர்கள் கிடச்சிச் சேந்தாச்சா?” வடிவு உதட்டைப் பிதுக்குறான். "எங்கங்க. அதென்னமோ ரெண்டாயிரம் கட்டணும்னாங்களாம். உள்ளுக்குள்ள ஏதோ கரசபுரசலு. அவருக்கும் கால்ல ஏதோ குத்தி காச்சல் கடுப்பு. எந்திருக்கிறதுக்கில்ல. இந்தப் பொண்ணு பாருங்க.." குரலைத் தாழ்த்திக் கொண்டு சுற்று முற்றும் பார்க்கிறான். "நேத்து காலம எங்கோ ஒடிட்டது. ஒடயாரு வீட்டுக்குப் போச்சின்னாங்க. என்னப்போயி வீரமங்கலத்துல விசாரிக்கச் சொன்னாங்க. அங்க இல்ல. நமுக்கேங்க வம்பு. அவங்க சினிமாக்குப் போயிட்டாங்கன்னு சொன்னேங்க. ஆக பொண்ணு இப்ப வந்திருக்குதோ என்னமோ...?” அவன் புருவங்களை நெரித்துக்கொண்டு நிற்கிறான். "அவரு மகன் மட்ராசில இருக்காரில்ல...? அங்க போயிருக்குமா இருக்கும்?" "அதென்னன்னு தெரியல மகங்கsட செரியில்லிங்க." இதற்குள் பஸ் வருவது தெரிகிறது. இருவரும் ஒடிப்போய் இடம் பிடிக்கிறார்கள். முன் வரிசையில் கெளரவமான தேவுவின் அருகில் அமரும்போது வடிவுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இவன் கையை அமர்த்திவிட்டு அவனே சீட்டெடுக்கிறான். “என்னாத்துக்குங்க நீங்க, சீட்டெடுக்கிறது?” "பரவாயில்ல, நான் உனக்குச் சீட்டெடுக்கலாம். எல்லாம் செய்யலாம்.” புன்னகை. கறுப்புக்கூட உதிர்ந்து பயல் எப்படி இருக்கிறான்! படிச்சவன் தன் இனத்தானை ஒதுக்குவதைத்தான் வடிவு கண்டறிந்திருக்கிறான். கோபு, நின்ற இடத்தில்கூட நிற்காமல் போவான். வாடா போடா என்று எவ்வளவு துச்சமாகப் பேசுவான்? ஏன், சட்டக்கூலி கொடுக்கக்கூடாது என்று நின்றான்! மருள் நீக்கி வரும்வரை அவன் எதுவும் பேசவில்லை. அங்கே இறங்கி நடக்கின்றனர். வரப்பின் குறுக்கே நடக்கையில் திடீரென்று "ஆமா, அந்த ஐயனார் கொள வெவகாரம், அதற்கு ஒண்னும் பண்ணலியா?” என்று கேட்கிறான். "..என்ன பண்ணுறதுங்க? அவனுவ பக்கம் அல்லாக்கட்டும் ஆளுகளும் இருக்காங்க. கொடி புடிச்சிட்டுக் கூச்சப்போடுவம்.