பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O சேற்றில் மனிதர்கள் பின் தாழ்வாரத்தில் இருந்த கோழிக் கூண்டைத் துக்கிவைத்து பெட்டையையும் ஆறு நோஞ்சான் குஞ்சுகளையும் விடுதலை செய்கிறாள். வெளி முற்றத்தில் மூங்கிற் படலைத் தடுப்புக்குள் அவரை, புடல் விதைத்துக் கொடிவீச எழும்பியிருக்கிறது. முளைக்கீரைப் பாத்தி ஒருபுறம் பசுமையாக இருக்கிறது. கோழியைப் படலைக்கு அப்பால் விரட்டிவிட்டு அவள் இன்னொரு புறம் நிற்கும் மரத்துப்போன பசுவை அவிழ்த்து வேறு முளையில் கட்டுகிறாள். அப்போது ஆற்றின் கரை மேட்டோடு கையில் உணவுத் துரக்குகளுடன் பெண்கள் நடவுக்குப் போகிறார்கள். 'அம்சு!...” என்று ஒருத்தி கூவுகிறாள். 'ஒங்க பங்குல நடவா இன்னிக்கி?" 'தெரில. சாம்பாரு வந்திருப்பாரில்ல?” 'இல்லியே? ஐயனார் கொளத்துல நேத்தே துட்டிக்குப் போயிருக்காவன்னு செவத்தையஞ் சொன்னா?” பல் துலக்கிக் கொண்டிருந்த சம்முகம் திரும்பிப் பார்க்கிறார். 'ஆரு.? சாலாச்சியா? என்னம்மா? ஐயனார் கொளத்துல ஆரு போயிட்டா?” 'அதா, குப்பன் - சாம்பாரு சம்பந்தி, நேத்துக் காலமே போயிட்டாராம். சங்கத்தலவரப் பாக்கனும்னு நேத்து மத்தியானமே வந்திருந்தாவ..." சம்முகத்துக்கு துணுக்கென்று உணர்வு முட்டுகிறது. குப்பன் தான் இவருக்குப் படைத் தலைமைபோல் நம்பகமான தோழன். இவருக்குச் சொந்தமான எட்டு மா நிலம். ஐயர் பண்னையின் ஆறு ஏகரா பந்தகமாக வந்திருக்கும் துண்டு பூமி. எல்லாவற்றுக்கும் காவலிருந்து, மடைகோலி, மடை அடைத்து, கங்காணம் செய்பவன். உழைப்பாளியான குப்பனுக்கு உழைப்பாளியான மகனும் தலையெடுத்து விட்டான். பெண்கள் மூவரையும் கட்டிக் கொடுத்தாயிற்று. கடைசிக்காரி பஞ்சமியைத்தான் ஐயனார் குளத்தில் கட்டியிருந்தான். அங்கே ஏதோ தகராறு. கையில் ஒரு குழந்தையுடன் அவள் தாய்வீடு வந்து ஐந்தாறு மாதமிருக்கும். புருசன் விலக்கிவிட்டான் என்று தான் சொன்னார்கள். அந்தப் பெண்ணின் மாமியார்க்காரிதான் இறந்துபோனாளா? பெண்ணை விலக்கிய