பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சேற்றில் மனிதர்கள் இவங்க சாமி கும்பிடணும்னு சொல்றப்ப நீங்க குடிசயத் துக்கிட்டு நடுவீதில நிக்கனும்! அது சரி, முன்ன ஸ்கூல் கட்டணும்னு உங்களக் குடிசங்களத் துக்கிட்டுப்போயி, கோயிலுக்குப் பக்கத்தில அவங்கதா போட்டுக்கச் சொன்னாங்க. அப்ப, வெள்ளாழத் தெருப் பக்கத்திலோ, அக்கிரகாரத்துக்குப் பக்கத்திலோ உங்க நாலஞ்சு பேருக்கு எடம் குடுக்கக் கூடாதா? பரப்பயல்னா, ஊருக்கு வெளியே இருக்கணும்னுதா இப்பவும் நினைக்கிறாங்க இல்லியா? இத்தக் கேக்க உங்களுக்குத் தெரியலி யே?” வடிவு ஒரு வியப்புடன் தேவுவின் சொற்களை ஏற்கிறான். "நாயந்தான். இப்பக்கூட, அக்கிரகாரத்தில பல வீடும் பாழடஞ்சி கிடக்கு ஆத்தோரம் வரயிலும் எத்தினி கொல்லை நீண்டு பாழாக்கிடக்கு? அங்க போயிக் குடிசைகளைப் போட்டுக்க எடம் குடுப்பாங்களா? மறுபடியும் ஊருக்கு வெளியே இன்னும் தள்ளி ஆத்துக்கு அக்கரையில சட்டியத் துக்கிட்டு ஒடனும்னு தான சொல்றாங்க.." வடிவு வெளிப்படையாகக் கேட்கவில்லை. ஆனால் உள்ளே சலனமடைகிறான். "என்ன பேசாமலிருக்கிற வடிவு? புரட்சியக் கொண்டா ரோம்னு எங்கப்பன் உங்கப்பன் உங்க தலைவரோட அப்பன் எல்லாம் அடிபட்டாங்க. சாவுக்கும் அஞ்சல. அம்மாமாருக ளெல்லாம் போலீசுக்காரனும் அவனும் இவனும் மானம் குலச்சிச் சுமை சுமக்க வச்சதையும் பொறுத்தாங்க. ஆனா எல்லாம் அடங்கிப் போச்சு குடுத்த விலையெல்லாம் வெத்துக்கருக்காய்க் குன்னு ஆச்சி. நினைச்சிப் பாரு...” வடிவுக்குச் சுருக்கென்று உரைக்கிறது. "புரட்சி என்ற சொல்லைப் பற்றி வடிவு நிறையக் கேட்டிருக்கிறான். அவர்கள் சங்கத்துக் கோஷமே அந்த உயிர்ச் சொல்தான். உச்சவரம்புப் போராட்டம், கூலி உயர்வுப் போராட்டம், விலைவாசிப் போராட்டம், நிலப் பட்டாப் போராட்டம் என்று எத்தனையோ போராட்டங்களில் அவனுடைய அப்பன், ஏன், அம்மாவும்கூடக் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றிருக்கிறார் கள். ஆறுமாசம், நான்கு மாசம் என்று போவதும், வக்கீல், கோர்ட்டு என்று அலைவதும், அவனுக்கு வாழ்க்கையில் சாதாரணமாகப் பழகியவை. ஆனால் அவன் பெரும்பாலும்