பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 சேற்றில் மனிதர்கள் டாக்டரிடம் வந்து பிளாஸ்திரி போட்டுக்கொண்டு திரும்பி வருகையில் அலுவலகத்தில் லட்சுமியும் வடிவும் வந்திருக்கின்றனர். அவருடைய கோபம் அவர்களிடத்தில் பாய்கிறது. "என்னாத்துக்கு இப்ப வெட்டிக்கு பஸ் சார்ச்சுக் குடுத்திட்டு வந்திய?” 。■ லட்சுமி திகைக்கிறாள். "நீங்க வந்தவங்க ஒரு பேச்சு சொல்லியனுப்பனுமில்ல? என்ன ஏதுன்னே புரியல. கிளவியானா நேரத்துக்கு நேரம் புடுங்கி எடுக்குது, போயிப் பாத்துட்டு வாடின்னு.” "அது சரி, இவன என்னாத்துக்குக் கூட்டிட்டு வந்த! உனக்கு எடந் தெரியாதா? ஏண்டா? மே ச்சாரி ஒழவு முடிச்சாச்சா? சம்பா நடவாகனுமே?” லட்சுமியும் அவனும் மெளனம் சாதிக்கின்றனர். "ஏண்டால, நா கேக்கிறம் கம்மா இருக்கிற?” "விருத்தாசலம் பிள்ளையும் பூசாரியும் எங்கவூட்டெல்லாம் அனனிக்கு நான் போறதுக்குள்ளாற போலீசு வச்சிட்டுப் பிரிச்சுப் போட்டுட்டாங்க முதலாளி' குண்டைத் துக்கிப் போட்டாற் போலிருக்கிறது. 'அடப்பாவிங்களா?..." "இவ அன்னிக்கி ராத்திரி வந்து தங்கிட்டுப் போன வந்தா, காலமதா வந்திருக்கிறான். குப்பன் சாம்பாருதா. பாவம், கீத்து வாங்கி வளச்சிவச்சிருக்கா. அந்தப் பளனிப்பய வெளயாட்டுப்பய. நீங்களே கேளுங்க இவன!” "இல்ல மொதலாளி, குடிச போட அம்பது ரூபாதான்னு வீரபுத்திரன் குடுக்கிறான். அதுல என்ன ஆகும் மொதலாளி? ஆட்ட வேற அன்னிக்கு ராவில எந்தப்பயலோ பத்திட்டுப் போயிட்டான். அவனத் தேடி லச்சுமாங்குடி போன.” "புளுகிறான். மட தண்ணிப் பாக்கல, ஒண்ணில்ல ஆளயே கானோம்.” சம்முகத்துக்குச் சொல்லொணாக் கோபம் வருகிறது. "சரி, இந்த சண்டையெல்லாம் இப்ப வானாம். நா என்ன செத்தா பூடுவ? கையில காசில்லாம செத்திட்டிருக்கிற காருக்கு அஞ்சு ரூபா, காபிக்கு நாலு ரூபான்னு செலவு வச்சிட்டு வாரிங்க." "நா இங்க வக்கிலப் பார்க்க வந்தே முதலாளி. அவங்க