பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 சேற்றில் மனிதர்கள் நிலம். நாம குடிச போட்டு ஆக்கிரமிச்சிட்டோம்னு தா பாயுவாங்க. அவங்க நோட்டீசு குடுத்ததும் மெய்; ஆனா பிச்சுப் போட்டிருக்க வானாம். சமரசமாப் போயிருக்கலாம். நாம பொறுப்போம்; சமயம் வரும், செயலில் காட்டலாம். நம்ம பக்கம் நிறைய நியாயம் இருக்கு." "நீங்க ரொம்பப் பயப்படுறீங்க முதலாளி: இன்னிக்கு எந்த மயிரானும் அரிசனங்க குடிசயப் பிரிக்கச் சட்டமில்ல?” "என்னடா, நீ துள்ளுனாப் போதுமா? நான் சொல்லிட்டே இருக்கேன்ல? சட்டம் என்னெல்லாமோதா இருக்கு அவனுவ சட்டம் தெரியாதவனுவளா?. நான் வந்து எல்லாம் பாக்குறேன். இப்ப எல்லாம் விவரமா விசாரிச்சி தவராறு அத்து மீறல் எல்லாம் குறிச்சிட்டு, பேரணிக்கு மகஜர் தயாரிக்கிற மில்ல, அப்ப வைக்கிறோம். அவங்களே இப்பிடி நடந்திருக் குன்னா விசாரணை பண்ன ஏற்பாடு செய்யிவாங்க.." அவன் தலையைச் சொறிகிறான், குனிந்துகொண்டு. 'தும்ப வுட்டு வாலைப் புடிக்கிறீங்க முதலாளி!” 'சர்த்தாண்டா! பெரிய. விவகாரக்காரந்தா, இப்ப சொன்னதைக் கேளு, அடுத்த பஸ்ஸப் புடிச்சிட்டு வூட்டுக்குப் போலாம்.” - வீச்சம் லேசாக மூக்கில் இழைகிறது. கருவாடா? "என்னாடா, சாக்குப் பையில?” கீற்றுப்புன்னகை முகிழ்க்கிறது. "ஒண்ணில்ல முதலாளி..." --- "என்னடா ஒண்ணில்ல? வக்கீல் வூட்டுக்குப் பெரிய கருவாடா கொண்டிட்டுப் போற?” "இல்ல முதலாளி, நாம் போயிட்டு நிமிட்டுல பஸ்ஸுக்கு வந்திடற. நீங்க போங்க.." சாக்குப் பையை இடுக்கிக்கொண்டு அவன் நிற்காமல் ஒடுகிறான். "...பாம்பு பிடிக்கப் போயிருக்கிறான். மட்டு மரியாதியே வைக்கிறதில்லிங்க.." தங்கசாமி லட்சுமியைப் பார்த்து வருகிறார். "என்னாமா? வூட்டுக்காரரை அளச்சிட்டுப் போக வந்துட்டீங்களா? நாங்கல்லாம் மனிசங்கல்லியா?” "ஐயோ, யாருங்க அப்பிடிச் சொன்னது? நீங்கதாம்