பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சேற்றில் மனிதர்கள் தோற்றக்கூடிய சிவப்பு, நெற்றிப் பச்சைக்கோடு, இந்த வயசிலும் தீர்க்கமாகத் தெரிகிறது. அவள் திரும்பி சுருண்டு கிடக்கும் கிழவனை எழுப்புகிறாள். "த, எந்திரி, புள்ள காலேசிக்குப் போகுது. எந்திரி..!" காந்திக்குப் பாட்டனின் அருகில் செல்வதற்கு விருப்பமில்லை. பாட்டியைப்போல் நறுவிசாகச் சிக்கென்று இருக்கமாட்டார். “தாத்தா, நான் போயிட்டு வாரேன்.” வாய் பேசத் தொடங்கும்முன் கிழவனுக்கு இருமல் பிடித்துக் கொள்கிறது. "யே குட்டி அம்சு! நீராரம் இத்தினி கொண்டாடி..!" "ஆமா, நீராரம் கறட்டுக் கறட்டுன்னு இருமிட்டு!...” "உனக்கென்னடீ தே.மவளே? நா இந்துாட்டு எசமான். கொண்டாடீ" இருவருக்கும் இடையே பொழுது விடிந்ததிலி ருந்து இவ்வாறு சிறு பூசல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும். கிழவனுக்கு உடம்பு ஒடுங்கினாலும் இன்னும் குரலும் பிடிவாதமும் ஒடுங்கிவிடவில்லை. கண் முக்காலும் தெரியவில்லை. முடி உதிர்ந்து, தலை பனங்குடுக்கை மாதிரி ஒரு தோற்றம் தருகிறது. நீராகாரம் கேட்ட உடன் வராததால் வசை புழுக்கிறது. - 'லட்சுமி, அவரு கேட்டதக் குடுக்கிறதுக்கென்ன? ஏம்போட்டு இளுத்திட்டிருக்கிய? அவுரு வயசுக்கு அவரு கஷ்டம் ஆரும் பட்டிருக்கமாட்டா, நீராரம்தான கேக்கிறாரு?" "நேத்து சோறொண்ணும் மிஞ்சல. இப்பதா இட்லி ஊத்தி வச்சிருக்கு, டீத்துள் போட்டு சூடாக் கொண்டு வாரனே? வாங்குவாரா?” லட்சுமியின் குரல் கேட்க வேண்டியதுதான் தாமதம். மேலும் வசைகள் பொலபொலக்கின்றன. அம்சு குவளையை எடுத்துக் கொண்டு ருக்குமணியின் வீட்டுக்குச் சென்றாள். காந்திக்குக் கோபமாக வருகிறது. "போலாம்பா, பஸ் வந்திடும்...!" "சரி, வாரேன், லட்சுமி. எல்லாம் பத்திரமாப் பாத்துக்க நா சாங்கால பஸ்ஸுக்காகக்கூடக் காத்திருக்க மாட்டே முடிஞ்சா அக்கரக்கி வந்து முன்னதா வந்திடுவேன்.”