பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 சேற்றில் மனிதர்கள் கொடியும் இருக்கு இப்ப!...” "எல்லாரும் சேந்து எதானும் செஞ்சாலும் பலனிருக்கும். ஒருத்தன மத்தவன் கழுத்தப் புடிக்கிறதிலியே இருந்தா என்னத்த நடக்கும்? இத்தயே சாதகமாக்கிட்டு மேலே போறவன் போயிட்டே இருக்கிறான்." நடைபாதையில் இந்தப் பேச்சுக்களைச் செவியுறுகிறார் சம்முகம், உறைக்கிறது. ஒரிடத்தில் குளிக்க இறங்கும் கோலத்தில் தனது இளமைப் பூரிப்புக்களைக் காட்டிக்கொண்டு ஒரு சினிமா நடிகையின் 'கட் அவுட் கண் சிமிட்டிப் புன்னகை காட்டி நீங்கல்லாம் எங்க போlங்க? இப்படி வாங்க!' என்று அழைக்கிறது. “உரவிலை குறையுங்கள்! உற்பத்தி செய்த நெல்லுக்குக் கட்டுப்படியாகும் விலை கொடுங்கள்!” கோஷமே இடறி விழுவதுபோல் இருக்கிறது. "என்ன எளவுக்கு இப்பிடிப் பொம்பிள பொம்மய வச்சித் தொலைச்சிருக்கானுவ துரத்தேறி!” கிட்டம்மா காறித் துப்புகிறாள். பழக்கப்பட்டுப் பழக்கப்பட்டுக் காய்த்துப்போன சாலைகளில் அத்தனை கால்களின் அத்தனை மக்களின் செருப்பில்லா அடிகளின் உயிர்த் துடிப்பேறியும் உணர்ச்சிப்பொடி பறக்கவில்லை. "எனக்கு உணர்ச்சியே கிடையாது” என்று கிடக்கிறது. இந்தப் பேரணிச் செலவு, உடல்பாடு இவற்றால் முன்னே நின்று வாழ்வின் முண்டு முடிச்சுக்களாய் அச்சுறுத்தும் பிரச்னைகளைக் கரைக்க முடியப் போகிறதோ? மழைச்சார ல் ஒய்வதும் திடீரென்று வலுக்கத் தொடர்வதும் போன்று குரல்கள் தளர்ந்து ஒயும் சமயம் எங்கோ ஒரு தனிக்குரல் எழும்பப் பலரும் அதைத் தொற்றுவதுமாக தமிழகத்தின் மூலைமுடுக்குக் கிராமங்களிலிருந்து வந்த மண்ணின் மைந்தர்களின் பேரணி சாலையில் வருகிறது. உயர்நீதிமன்றம் வரும்போதே காவல் துறையினர் தடுத்துநிறுத்துகின்றனர். தலைவர்கள் மட்டுமே அமைச்சரைச் சந்தித்துக் கோரிக்கைப் பத்திரங்களை அளிக்க அழைத்துச் செல்லப்படுகின்றனர். பேரணி, சென்னைப்பட்டினம் போகிறோம், நான்கு நாள் சம்பாத்தியம் போகும் என்று மிகப் பெரியதோர் உச்சகட்டத்தை