பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 சேற்றில் மனிதர்கள் துடைத்துவிடச் செய்யும் சிறுக்கிகள்! வாசலில் நிற்க வைத்து, கதவடைக்கச் சொல்லி அவமானம் செய்கிறான் துரோகி! கட்சி மாறலைக் காட்டிலும் படுபாதகமான துரோகம்! பையில் இருக்கும் கதம்பமும், பழமும் அவரைப் பார்த்து நகைக்கின்றன. தாயிடம் ஐம்பது ரூபாய் வாங்கிச் சென்றிருக்கிறான். இவர் கையில் பத்தே ரூபாய்தான் இருக்கிறது. போகும்போது பத்து இருபது வாங்கிச் செல்லவேண்டும் என்று நினைத்திருந்தார். சொந்த மகனிடமே அவமானப்பட்டுத் திரும்பி நடக்கையில் நெஞ்சு குலுங்குகிறது. வழி நிச்சயமாகத் தெரியாது. இருள் பரவிவிட்ட நேரம். எல்லாச் சாலைகளும், குறுக்குத் தெருக்களும் ஒரே மாதிரித் தெரிகின்றன. எட்டுப் பேரிடம் வழிகேட்டு அவர்களுடைய வண்டியும் தோழர்களும் தங்கிய இடத்தை வந்தடைகிறார். o "அதுக்குள்ள மகனப் பாத்திட்டு வந்திட்டியா?." தங்கசாமி பீடிக்கங்கைத் தட்டிக்கொண்டு கேட்கிறான். o "இல்லீங்க, இந்த ஊருல கேட்டா எவனாலும் வழி வெவரம் சொல்றாங்களா? அடுத்தாப்பில கொலவுழுந்தாக்கூடப் பாக்க மாட்டாங்கறது சரியாத்தானிருக்கு அதுவும் இந்த ஊருப் பொம்பிளங்க, என்னமோ நாம வெளியூரு ஆளுன்னா அவங்களக் கடிச்சி முழுங்கிடுவம்போல கேட்டாக்கூட பதில் சொல்ல மாட்டேங்கறாளுவ காலம ஆபீசு பக்கம்தான் பாக்கணும். பாக்காம போகக்கூடாது. வண்டி காலம எத்தினி மணிக்குக் கெளம்பும்." "அதா இப்ப சிலபேரு சினிமாக்குப் போயிட்டாங்க, காலம விடியறப்பதா கெளம்பனும்?." - "கொஞ்சம் நின்னிங்கன்னா அந்தப்பய ஒம்பதுக்கு ஆபீசுக்கு வந்திடுவான். பாத்துட்டு வரேன். இல்ல, வண்டி நிருபுடியாப் போவணும்னாதா என்ன பண்ணுறதுன்னுறேன்." "ஒரு அரை மணி போதுமில்லை, அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டாப் போச்சு...” சம்முகம் எட்டுமணிக்கு முன்பாகவே அவனுடைய அலுவலகத்தின் முன் வந்து காத்திருக்கிறார். இரவு முழுவதும் உறங்கியிராத முகம் சோர்வில் அயர்ந்திருக்கிறது. அவன்