பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 169 சென்றுவரும் நேரம் தவிர மற்ற நேரங்களில் திண்ணையில முடங்கியே கிடக்கிறார். பொழுது விடிந்ததிலிருந்து அன்று நாகு ஊளையிடுகிறான். இந்த ஊளையொலி புதிதல்ல. பழக்கமான இசைதான். ஆனால் வாழ்க்கை இப்போது சுருதி குலைந்து கிடப்பதால் இது நாராசமாக இருக்கிறது. "அந்தப்பய மென்னியத் திருகிக் காவாயில போடு! என்னாத்துக்குடி எளவு இப்படி ஊளயிடுறா? இந்தப் பயலுக்கு ஒரு சாவு வரமாட்டேங்குது." வாசலில் கோலம் போட்டுவிட்டு வரும் அம்சுவை அழைத்து லட்சுமி இரகசியமாக, "போயி நாலு இட்டிலி வாங்கிட்டு வா. நேத்து முச்சூடும் எதுவும் சாப்பிடல அவெ. பசிக்கிதோ என்னமோ?...” என்று கூறுவதும் சம்முகத்துக்குக் கேட்டுவிடுகிறது. 'ஏய், எங்கடி போற? இவளயும் காலங்காத்தால கடவீதிக்குப் போகச் சொல்லு! பல்ல இளிச்சிட்டு எவங் கூடயேனும் போவா? மானம் அச்சம் மரியாதி ஆத்தாளுக்கிருந்தால்ல மவளுக்கு இருக்கும்? ஒரு ஒச்சம் வந்து ஊரே சிரிக்கிது; தலைநீட்ட முடியல. புழுக்கப் பயலுவல்லாம் நாக்கப் பல்ல இடுக்கிட்டுச் சிரிக்கிறான். அறிவு இருக்குதா உங்களுக்கு?” லட்சுமிக்கு ஆத்திரம் தாளவில்லை. சாணியை அள்ளிக் கூடையில் போட்டு மூலையில் கொட்டுகிறாள். பரட்டுப் பரட்டென்று முற்றத்தைப் பெருக்குகிறாள். == - சம்முகத்துக்கும் எழுச்சி அடங்கவில்லை. அவருடைய ஆற்றாமைக்கு ஒரே இலக்காக இருப்பவள் லட்சுமிதான். முடி சிலும்பலில்லாத கூந்தல் கட்டு, எப்போதும் கலையாத பளிச்சென்ற பொட்டு, பெரிய அந்தஸ்தைக் காட்டும்வகையில் சீராகக் கொசுவம் வைத்து உடுத்த சேலைக்கட்டு, பதிந்த ரவிக்கை, கட்டுவிடாத உடல் எல்லாம்.அவருடைய கடந்த கால நிகழ்ச்சிகளின் மூலைமுடுக்குகளை எல்லாம் குடையும் வண்ணம் கோபமூட்டுகின்றன. = அறைக் கதவு திறக்கப்படாததால் நாகு கதவைப் போட்டு தட்டுகிறான். இவர் எழுந்துசென்று கதவைத் திறக்கிறார். அவன்