பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 185 சரேலென்று இங்கு விவசாயத் தொழிலாளர் சங்கம் என்ற அலுவலகம் இருக்கும் என்ற நினைவு வருகிறது. முன் காட்சிக் கூட்டம் இன்னும் வெளிவரவில்லை. சாலி, சிகரெட்டை ஊதிக்கொண்டு, ஏ என்று போட்ட அடையாளத்தில் ஏயின் ஒரு காலோடு, உடலில் ஒன்றுமில்லாமல் முழங்காலைக் கட்டிக் கொண்டு தன் நீல விழியை அந்தரங்கமான எண்ணத்தைக் காட்டும் சாளரமாக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் பெண்ணைப் பார்த்தவாறு நிற்கிறான். திடீரென்று அவள் அருகில் இருக்கிறாளா என்று பார்ப்பதுபோல திருப்பிப் புன்னகைக்கிறான். “காந்தி நீ ஆறு, குளத்திலே நீச்சலடிப்பேல்ல?” "ஹாம். எனக்குத் தெரியாது.” "உனக்கு நீச்சலுடைபோடணும்னு எனக்கு ஆசை.” சிகரெட் சாம்பலைத் துணில் தட்டிக் கொண்டு சிரிக்கிறான். "டிக்கெட் வாங்கிட்டு உள்ளாற போக நேரமாகுமா?” "நாம பால்கனில உக்காந்துப்போம்.” "ஹலோ, என்னப்பா சாலி ஆளயே காணம்..?” யாரோ ஒரு விடலை தோளைக் குலுக்குகிறான். "மீட், மிஸ் காந்தி?...” பரட்டைத் தலையும் யானைக் குழாய் சட்டையுமாக இருக்கும் அவன் புன்னகை செய்கிறான். இவளுக்கு இது ஏதேனும் முன்னேற்பாடாக இருக்குமோ என்ற திகில் பரவுகிறது. அவர்கள் பேசும்போது கூடியிருக்கும் கூட்டத்தைக் கண்களால் துழாவுகிறாள். அப்போது படம் முடிந்து கூட்டம் வெளியே தி.புதிபுவென்று வெளிவருகிறது. அவர்கள் சீட்டு வாங்க நிற்கையில், சரேலென்று காந்தி கூட்டத்தில் கலந்து கொள்கிறாள். விடுவிடென்று வெளியேறு கிறாள். அவளுக்கு அடுத்த சிந்தனை இல்லை. ஒரு கிராமத்தான் போன்ற ஆணும், மனைவியும் கைக் குழந்தையுடன் முன்னே நடக்கின்றனர். தலைப் பூவைப் பிய்த்துப் போட்டுவிட்டு அவள் அவர்களுடன் விரைகிறாள். 'துரத்தேறி” என்று காறி உமிழ்கிறாள் அந்தப் பெண். "என்னாளெவு? கூச்சநாச்சம் இல்லாம!...”