பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 189 'அவனுக்கு ஒடம்பு நல்லால்ல. ஐயனார் குளத்து வயித்தியரிட்டப் போனா..." "ஏ என்னாச்சி? ரொம்பக் குடிச்சிட்டானா?” "அப்பிடியெல்லாம் வடிவு குடிக்கமாட்டா. அன்னிக்கி மழயில முச்சூடும் நனஞ்சிட்டான். சளி புடிச்சிக் காச்சலும் ஒடம்பு வலியுமா அல்லாடினா. சோறே சாப்பிடறதில்லே. பித்தமாயிருக்குன்னா...” "சரி, பழனி இருக்கிறானா?” "பழனி இப்ப எப்பிடி வருவான்? மிசின்ல மூட்ட வருமில்ல?” 'வகுப்ப சா யங் கால மா வச் சிக்கிறதுன் னாலும் தோதுப்படுறதில்ல. அல்லாம் குடிக்கப் போயிடறாங்க. பொம்பிளங்களுக்கு வீட்டு வேலயிருக்கு. ஆனா இப்ப நடவு உழவு இல்ல, மத்தியானம் ஒரவரு ஒதுக்கலான்னு நினைச்சி வரேன். அதான், காம்ரேட் காலம ஏழு மணிக்கு வேல தொடங்கி, மத்தியானம் ரெண்டு மணியோட வேலய முடிச்சிடனும்னு சில இடங்களில் அமுல் பண்றாங்க மஞ்சக்குடிப் பக்கமெல்லாம் இதுக்கு ஒத்திட்டிருக்காங்க, இதுனாலே நாம நாலு மணிக்குப் படிப்பகம் நடத்தலாமில்ல...?” சம்முகம் பேசாமல் நடக்கிறார். இதை ஒப்புக்கொள்ள முடியவில்லை அவரால். "நாம இந்தச் சங்கக் கூட்டத்துல பேசினதுதான? சேத்தில எறங்குனா ஏழு மணி நேரமும் தல நிமிராம வேலை செய்ய முடியுமா? நடுவில ஒருமணி, ரெண்டு மணி இருக்கிறது சரிதான். காலம எட்டுலேந்து பன்னண்டு. பெறகு இரண்டிலேந்து அஞ்சு, அஞ்சரைன்னு இருக்கிறதா சரி. அநேகமா பக்கத்திலேந்தா பொண்டுவ ஆடுகளுக்குப் போயிட்டுக் கூட வாராங்க புள்ளிக்கிப் பாலு கொடுக்கிறதுன்னு வேற இருக்கு. அதுமில்லாம, ரெண்டு மணிக்கே கள்ளுக் கடயில போயி உக்காந்திடுவாங்கல்ல?.” சங்கத்து வாசலுக்கு வருகிறார்கள். நாலைந்து சிறுவர் சிறுமியர் மட்டுமே ஆடிக்கொண்டிருக் கின்றனர். “ஏண்டால? ஸ்கூலுக்குப் போகல நீங்க?" பொன்னனின் பயல் முருகன் சம்முகம் கேட்டதும் மூக்கை உறிஞ்சிக்கொண்டு ஒடுகிறான்.