பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டு, கண்ணிரை விழுங்கிக்கொண்டு அவரைப் பார்க்கிறாள். 'இது நியாயமா என்று துளைப்பது போலிருக்கிறது அந்தப் பார்வை. சிறிது நேரம் அவருக்கும் எதுவும் புரியவில்லை. பொன்னடியான் வெளியே வந்து தெருவைப் பார்க்கிறான். "எந்த மூஞ்சிய வச்சிட்டு நாய் மாதிரி உள்ளே நுழஞ்ச? சீச்சி! வெக்கங்கெட்டு எப்பிடி வந்து உள்ளாற துழைஞ்சு எம்முன்ன வந்து நிக்கிற? பொட்டச் சிறுக்கி, உங்குனத்தக் காட்டிட்டியே?’ அவள் அசையவேயில்லை. அவள் எதிரொலி எழுப்பியிருந்தால் அ பெ டு ைடய பொங்கலுக்கும் குமைச்சலுக்கும் வடிகாலாக இருந்திருக்கும். சிலையாக நின்றது எழுச்சிக்குத்துண்டுகோலாக இருக்கிறது. தம்முடைய சீற்றத்தின் வேர்களை அசைப்பதாக இருக்கிறது. எனவே தமக்குச் சாதகமான வகையில் மருமகள் வெளியே நிறுத்திவைத்தது, மகன் உதாசீனப்படுத்தியது எல்லாம் நினைவில் புரண்டு கொடுத்து அவரை வெறியனாக்குகின்றன. “என்னடீ, நாங் கேக்குற, நிக்கற? அந்தப் பய கூட ஸ்கூட்டர்லல்ல ஊர்கோலம் போனியாமே? ஒட்டல்லே பார்த்ததாக ஒந்திரியர் சொன்னாரு எண்சாணும் ஒரு சானாக் குறுகிப்போனேன். அப்பிடியே கெடந்து மானம் துடிச்சிச்சி. அப்பிடி ஒரு ஒடம்பு கேக்குமாடீ?. இந்தக் குடிலபெறந்து." வசைகள் கட்டுக்கடங்கவில்லை. எழுந்து தாவுகிறார். கிழவி குறுக்கே மறிக்கிறாள். "என்னடால, உனக்குப் புத்தி பெரண்டு போச்சு? அது இந்த மட்டுக்கும் சமாளிச்சிட்டு வந்திருக்குதேன்னு ஒரு தன்ம வேணாம்? இத உம்பய கூடத்தான் போயி கட்டிக்கிட்டான். அவன் ஒரு வூட்டில கொண்டாந்து வச்சி கொளாவல?." "நீ இப்ப நாயம் பேச வந்திட்டியாக்கும்? அவங் கண்ணு காணாம தொலைஞ்சி போயிருக்கிறா. ஒடிப் பூடிச்சாமேன்னு கேட்டவங்க திரும்பி வந்திடிச்சி போலிருக்குன்னு சொல்லுறப்ப. மானமே போயிடுமே! யாராருக்கோ நாயஞ் சொன்னான். பொண்ண மட்டும் கூட்டி வச்சிட்டான்னு சொல்லமாட்டா? ஒரு பய என்ன மதிப்பானா?. இனிமே இவள எந்தப்பய கட்டுவா? போயித்தொலஞ்சவ அங்கியே இருக்கிறத வுட்டுட்டு ஏண்டி வந்தே?”