பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சேற்றில் மனிதர்கள் "இங்கதா, கெழக்கால கரந்தக்குடி பண்ண." "கூலி எல்லாம். எப்படி? சட்டபடிதான?" "ஆமாம், ஏழு. ஒம்பதுதா..." "ஒண்ணுந் தகராறில்லியே?” "அதெல்லாமில்ல." சட்டென்று ஒடிப்போய், வெற்றிலை பாக்கு வாங்கி வந்து எம்பிக்கொண்டு நீட்டுகிறான். "என்னாத்துக்கு இதெல்லாம்? போ போ..." "வெத்தில போடுங்க முதலாளி?” "நா வெத்தில போடுறத வுட்டுப்புட்டே பல்லு வலி வந்திச்சி. எடுத்திட்டுப் போ.” "சும்மா போடுங்க முதலாளி! நம்ம புள்ளதாங்களே?” "ஆமாம். அதும் போடாது, படிக்கிற புள்ள..." இதற்குமேல் அவள் புதிய தொழிற் கல்வியைக் கற்று, மேல் வருக்கத்தினருக்கும் மேலாகப் படி ஏறப் போவதைப் பற்றிச் சொல்லிக் கொண்டாலும் அவர்களுக்குப் புரியாது. மேலும் மேலும் கோஷாப் பெண்கள். கம்மென்று அத்தர், சென்ட் வாசனைகள், மேலே போர்த்திருக்கும் போர்வையிலேயே எத்தனை பூ வேலைகள்! ஒவ்வொருத்தியும் முழங்கை வரையிலும் தங்க வளையல்கள் அணிந்திருக்கின்றனர். முன்பெல்லாம் எங்கு திரும்பினாலும் இவர்கள் செழிப்பு இவ்வளவுக்குக் கண்களில் பட்டிருக்கவில்லை. பஸ் கடைவீதியை விட்டுப் புறப்பட்டு, ஆற்றோரமாகவே சென்று பெருமாள் கோயிலுக்கு நேராக நிற்கிறது. மேல் சாதி அக்கிரகாரம், வேளாளர் தெரு மக்கள் ஏறிக்கொள்ளும் நிறுத்தம் இது. குருக்கள் ஆற்றில் நீராடிவிட்டுப் பளபளவென்று துலக்கிய குடத்தில் நீர் முகர்ந்து செல்கிறார். நந்தவனத்தில் நடராசு மலர் கொய்கிறான். “என்ன, சம்முகம், டவுனுக்கா?” என்று விசாரித்துக் கொண்டு வரதராஜன் முதல் பக்கத்து ஆசனத்தில் அமருகிறான். புதுக்குடியில் பள்ளி ஆசிரியர். இங்கே நடவுக்கு வந்து செல்கிறான் போலிருக்கிறது. "ஆமாம், நடவாயிட்டுதா?” "இல்ல, ரெண்டொரு பெரும்படிப் பாத்திரம் கல்யாணத் துக்கு எடுத்திட்டுப் போயிருந்தேன். உம் பொண்ணுதான இவ?."