பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 215 மாட்டு வாகடம் செய்யும் ஆசுபத்திரிக் கிழவன் இருமிக்கொண்டு ஆற்றுப் படித்துறையில் பல் துலக்குகிறான். மழை பெய்து சகதியாயிருப்பதால் ஆற்றோர மேட்டுப் பாதை வழுக்குமென்று பஸ்ஸை ஊருக்குள் நுழைய விடாமலே திருப்பிவிட்டான். சம்முகம் நடந்து வருகிறார். வெயில் சுள்ளென்று விழுகிறது. இந்த வெயிலில் முதிர்ந்த மணிகள் குப்பென்று பழுக்கும். அறுவடைக்குத் தயாராகும். சனி, ஞாயிறு வந்துவிடுகிறது. திங்கட் கிழமைதான் சென்று வீரபுத்திரனை விடுவித்து வர முயற்சி செய்யவேண்டும். அதற்குள் பனம். பணம் திரட்டவேண்டும். -- வடிவு. தடியை ஊன்றிக் கொண்டு ஆற்றுப் பாலம் கடந்து ஒடுவது தெரிகிறது. - சம்முகம் எதிர் வெயிலுக்குக் கண்களை சரித்துக் கொண்டு கூவுகிறார். "வடிவோய்...!. வடி.வோய்...?” அவன் திரும்பிப் பார்க்கவில்லை. இரவு முழுவதும் உறங்கவில்லை. அவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது என்று கூடிப்பேசி முடிவு எடுக்கவே நேரமாகிவிட்டது. படுத்த இடத்தில் மூட்டைப்பூச்சிகள், மண்டையைக் கொத்தும் பிரச்னைகள். பொன்னடியான் காந்தியைக் கட்டுவான் என்று தோன்ற வில்லை. ஐயரைப் பார்க்க இப்போது நேரமில்லாமலாகிவிட்டது. வீட்டுப்பக்கம் திரும்புமுன் ஆற்றுக்கரை மேட்டில் அம்சு நிற்பதைப் பார்க்கிறார். “ஏண்டி, அங்கே போயி நிற்கற?...” வடிவு. அவனுக்காகவா? "என்னாடி?” "ஒண்ணில்லப்பா. நாவு. நாவு ஒடிட்டான்.” "எங்க?" "அம்மாளும் அக்காளும் போனாங்க. இவனும் கூடப் போறன்னு ஓடினா ரூமில் போட்டுட்டுப் போனாங்க. ரொம்பக் கத்துனான் தொறந்துவுட்டேன்." "அம்மாளும் அக்காளும் எங்க போயிட்டாங்க?" எப்படிச் சொல்வது?