பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 சேற்றில் மனிதர்கள் ஆர்ப்பாட்டம் பண்ணுறிங்க?" இது ஒரு சூழ்ச்சியா? நிசமா? "இங்கே பெண் யாரும் இல்லை. வீணாக ஆர்ப்பாட்டம் செஞ்சு கலவரம் பண்ணாதீங்க. போங்க!” "குஞ்சிதம் இல்லை என்பதை எப்படி நம்புவது?" "நீவானா உள்ளாற வா..! பாரு?" "சீ!” என்று காறி உமிழ்கிறாள் லட்சுமி. "நாங்க அத்தினி பேரும் உள்ளாற வந்து பார்ப்போம்!” 'இதம்மா, வீண் வம்பு பண்ணாம மரியாதயாப் போயிடுங்க. பெண் பிள்ளைகளை இரவுக்கு வைப்பதில்லை. விட்டுவிடுகிறோம். காலம ஸ்டேஷன்ல வந்து அவங்க பதிவு செஞ்சிட்டுப் போயிடுவாங்க!” "அப்ப. அந்தம்மா எங்க இருக்காங்கன்னாலும் துப்பு சொல்லணுமல்ல?” லட்சுமியும் காந்தியுமே பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். "அது நாங்க சொல்றதில்ல. வாணா காலம எட்டுமணிக்கு வருவா. வந்து பார்த்துக்குங்க!" இவர்கள் என்ன செய்வதென்று திகைக்கையில் படார் படாரென்று அதிர்வேட்டுக்களைப் போன்று ஒசை கேட்க, கூட்டத்தினிடையே இருந்து பானைத் துண்டுகள் காகிதங்கள் வெடித்துச் சிதற, "ஐயோ, சுடுறான், சுடுறான்” என்று பெண்கள் அல்லோகல்லோலமாக அந்தக் குறுகிய கடைத்தெருவின் ஒரங்களில் சிதறிப் போகின்றனர். வெளியிருந்து காலிக்கும்பல் புகுந்து தள்ளுவதைப் புரிந்து கொண்ட வடிவும், பெண்களுக்குக் காவலாக வந்த வேறு சில ஆடவர்களும் கைத்தடிகளாலும், கொடிக் கம்புகளாலும் தாக்கத் தொடங்குகின்றனர். "சட்டிக்குள்ள பட்டாக வெடிய வச்சிக் கொளுத்திருக்கி றானுவ... நம்ம ஆளுவ அமைதியா இருங்க. தோழரெல்லாம் அமைதியாக இருங்க!” - கற்கள் வந்து விழுகின்றன. சம்முகத்தின் நெற்றியை ஒரு கூரான கல் பதம் பார்க்கிறது. லட்சுமிக்குத் தோளில் அடி விழுகிறது. ஒரு நடுத்தர வயசுக்காரி மோதப்பட்டுக் கீழே விழுகிறாள். காவலரின் குண்டாந்தடி சுழன்று குழப்பத்தை அடக்க அகப்பட்டவர் மண்டையை உடைத்து விடுகிறது. ஒன்றிரண்டு வேடிக்கை பார்த்தவர்கள்கூட அவசரமாகக்