பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 21 சகோதரர்கள் என்று கூட்டம் குறைவில்லை. இவர்களில் யாரே தாழ்த்தப்பட்டவராகத் தம்மினத்தை சார்ந்திருக்க முடியும் என்று சம்முகம் பார்க்கிறார். யாருமே தம்மினம் இல்லை என்று நினைக்கும்படியாக இருக்கிறது. ஒரு வெள்ளைக்கார், அம்பாஸ்டர் வந்து நிற்கிறது. அதிலி ருந்து ஒரு முன் வழுக்கைக்காரரும் ஒர் இளம்பெண்னும் இறங்கிச் செல்கின்றனர். சம்முகம் அவரை நினைவு கூருகிறார். அவர் ஒரு ஆலை அதிபர். கிள்ளிவளவனை முன்னதாகக் கண்டு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அரசியல் கட்சி என்று வேறு ஒரு பக்கம் சார்ந்துவிட்டபிறகு இவருக்குத் தொடர்பே விட்டுவிட்டது. என்றாலும் பழைய தோழமையை மறந்துவிடமாட்டான். இவள் விண்ணப்பம் பார்த்து யாரோ நினைவுவைத்துக் கொள்ளமுடியும்? மனம் உழம்புகிறது. தாழ்த்தப்பட்ட இனம் என்ற ஒரு துரும்பையே பற்றிக்கொண்டு சுழலுகிறது. பொழுது கிடுகிடென்று ஏறிப் பன்னிரண்டரையாகிறது பசி உணர்வு தலைதுாக்குகிறது. பிறகுதான் அவள் பெயரைக் கூப்பிடுகிறார்கள். இவள்தான் கடைசி என்று தோன்றுகிறது. உள்ளே சென்று முன்னறையில் இவர் தங்க, காந்தி தள்ளு கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே செல்கிறாள். அடியிலும் மேலும் வெளிச்சம் இருந்தாலும் கால்கள் மட்டும் தெரிந்தாலும், பேச்சுக்குரல்களும், நலிந்த காந்தியின் மொழிகளும் செவிகளில் விழுந்தாலும் ஒன்றும் தெளிவாகத் துலங்காமல், மிகப்பெரிய மலை ஏற்றத்தின் முண்டுமுடிச்சுக் கட்டத்தில் நிற்பதுபோல் இலேசானதொரு கலக்கம் ஆட்கொள்ளுகிறது. அவருடைய வாலிபப் பருவம், வாழக்கூடிய நாட்களெல்லாம் போராட்டம், போலீசு, கோர்ட்டு, வயல், அடிதடி, வழக்கு, காத்திருப்பு என்று கண்ணாடிச் சில்லுகளில் குத்திக்கொண்டு நடப்பாகவே மோதிக்கொண்டு கழிந்திருக்கிறது இதே ஊரில் வக்கீல் ஐயங்கார் வீட்டில் எத்தனை நாட்கள் காத்துக்கிடந்திருக்கிறார்? பசி, பட்டினிக்கு எல்லையே கிடையாது. கால் கால் ரூபாயாகக் காசு சேர்க்கும் தொல்லை. கஞ்சிக்கில்லா ஏழைகளிடம் வக்கீலுக்குக் கொடுக்கக் காக பறிக்கும் தொல்லையை அளவிடுவதற்கில்லை.