பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 229 செவத்தையன் கூறுகிறான். சம்முகத்துக்கு வேலை செய்வது பழக்கம் விட்டுப்போய் விட்டதால்தானோ வியர்வை இப்படி ஊற்றுகிறது? உள்ளுற ஒரு சூடு பரவித் தகிக்கிறது. மூச்சு வாங்குகிறது. சற்றே நிமிர்ந்து ஆசுவாசம் பெறுகிறார். "நீங்க கரையேறிடுங்க. இத ஆச்சி, ஒரு நிமிட்டு.” குப்பன் சாம்பார் அவரை விரட்டுகிறான். "அடே பழனி, கோட்டுப் பழுதய இப்பிடி வீசுடா..?” தொலைவில் பெண்கள் காவாயைக் கடந்து வருவது தெரிகிறது. சிவப்பும் பச்சையும் நீலமுமாகப் புள்ளிகளாய் நகர்ந்து வருகின்றனர். எத்தனை பேர் இந்த நான்கு மா நிலத்துக்கு என்று கணக்கிட்டுப் பயனில்லை. இது பஞ்சத்து அறுவடை ஆட்கள் அதோ இதோ என்று வந்து நெருங்குவார்கள். அத்தனை பேரும் பங்கிட்டுக் கொள்ளக் கொடுக்கவேண்டும். சாலையோரத்துக் கட்டாந்தரையில், முதன் முதலாக இந்தக் குறுவைக் கதிர்களை அடிக்கப் போகிறார்கள். பொன்னம்மா கூட்டிப் பெருக்குகிறாள். சாய்வாக வைத்திருக்கும் ஆறு பலகைக் கற்களிலும் பனி ஈரமா மழைத் துாற்றல் ஈரமா என்று வேறுபடுத்த இயலாத வகையில் ஈரம் படிந்திருக்கிறது. களத்தில் அறுத்து வைத்துவிட்டுக் குப்பன் சாம்பாரும் செவத்தையனும் அமாவாகியும் தலைத்துண்டை உதறிக்கொண்டு விடாயாறப் போய்விட்டார்கள். வானில் இன்று வெயில் கிடையாது என்பதைப்போல் மேகம் கூடியிருக்கிறது. கருமேக மில்லை என்று சம்முகம் திடம் கொள்கிறார். மாரியம்மா தன் கிழக்குரலைக் கிளப்பிக் குலவை இட்டுக்கொண்டு வருகிறாள். அது குலவையொலியா, நெஞ்சு பிளந்துவரும் ஒப்பாரியா என்பது புரியாமல் சம்முகத்துக்குச் சங்கடம் பிசைகிறது. மரபுகளிலும் சடங்குகளிலும் ஊறிப்போன பெண் குலம். வாழ்க்கையின் அலைப்புக்களில் பாறைகளோடும், அத்துவானங்களுடனும் மோதுண்டாலும் இன்னமும் நம்பிக்கையை விடாத மூதாட்டி. சிவந்த கண்களில் அவளுக்கு ஈரம் பசைக்கிறது. அவள் அரிக்கற்களை ஆக்கையில் வைத்துப் பிணிக்கையில்