பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சேற்றில் மனிதர்கள் போவாங்க, இங்கேயே சிங்காரம்தான் குட்டி டாக்டர். பிரசவ கேசெல்லாம் துரையம்மா பாத்திடுவா, சிங்காரத்துக்கிட்ட போயிக்காட்டி மருந்து வாங்கிட்டுப்போ. சிறங்கா வருமோ என்னமோ? எனக்குன்னா, சித்தப்பா, நீங்க அது சாப்பிடக் கூடாது. இது சாப்பிடக்கூடாது, ஸ்மோக் கூடாதுன்னு ஒரே தடையுத்தரவு, சக்கரை உனக்கொண்ணும் இருக்காது. உப்பெண்ணெய் காச்சி ஒத்தடம் கொடு.” சம்முகம் கடைசியில் சிங்காரத்தையும் பார்க்கவில்லை. 4 அன்றைய பொழுதின் ஆறுதலாக, மாலை நேர பஸ் கிடைக்கிறது. வழி நெடுகிலும் மண் அன்னை நீர் முழுகக் குளிர்ந்து நிற்கும் காட்சிகள். வரிவரியாக வண்ணப் புள்ளிகளாகப் பெண்கள் குனிந்து நாற்றுநடும் கோலங்கள், சமுத்திர ராசனிடம் புகுமுன் அன்னையிடம் பிரியா விடை கொள்ளும் காவிரித்தாய் இரண்டு கை விரல்களையும் அகலவிரித்து மண் அன்னையைத் தழுவிக்கொண்டிருக்கும் வளமை. இந்தப் பூமியில் மனிதர் பசி தீர்க்கும் அமுத சுரபிகளாய் ஆறு குளங்கள் நிரம்பித் துளும்பு கின்றன. அந்நாளில் வங்கத்துக்காரரான ஒரு தலைவர் ஒருமுறை கிராமக் கூட்டத்திற்கு வந்தார். பாரதம் முழுவதும் சுற்றியவர். இந்த அழகைக் கண்டு பரவசப்பட்டுப் போனார். எல்லாம் நீர், எல்லாம் மண் என்றாலும், ஒவ்வொரு நதியின் வன்மையிலும், தனித்தன்மை துலங்குகிறது. இந்த பூமியின் மண் தறிகளில் எத்தனை வகை மக்கள், இந்த மக்கள் யாரும் எதுவும் கொண்டு வருவதில்லை, இறக்கும்போது கொண்டு செல்லுவதுமில்லை. ஆனால் இந்த அழகுகளைச் சுதந்தரமாக அதுபவிக்க முடியாமல், மனிதனுக்கு மனிதன் ஆக்கிரமித்து அடித்துக் கொள்ள, இவற்றையே சாதனங்களாக்கிக் கொள்கிறானே என்றார். இந்தப் பேச்சை விசுவநாதன் தான் மொழி பெயர்த்தார். சாமி இல்லை என்று சொல்பவனும் இங்கே இயற்கையின் சூழலில் நெடி துயர்ந்து நிற்கும் கோபுரங்களைக் கண்டு மனம் சிலிர்க்கமுடியும். ஆனால் இந்த மண்ணிலே ஊன்றி இந்த அழகிலே வளர்ந்தவன், மனிதனுக்கு மனிதனாக இல்லை.