பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சேற்றில் மனிதர்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. காடா விளக்கடியில் திருக்கை மீன் கண்டமிட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த புண்யகோடிக் கிழவன் மண்ணில் விழுந்துவிட்ட கண்டங்களைப் பொறுக்கிக் கொண்டு வசை பொழிகிறான். சண்டை கைகலப்பு வடிவுக்கும் அருணாசலத்தின் தம்பி முருகையனுக்கும்தான். அவன் அழுக்குத் தண்ணிரை, வடிவு நிற்கையில் இவன் மீதே கொட்டினானாம். எல, ஏண்டா கண்ணு தெரியல. என்றானாம் இவன். கடமுன்னால நின்னா அப்படித்தா வுழுகும் என்றானாம் அவன். பேச்சு தடிக்கையில் பறப்பயல் என்று சாதியைக் குறிப்பிட்டான். அவ்வளவே, கள்ளுக்கடையிலோ, கடை வீதியிலோ இப்படித் தகராறு ஏற்படாத நாளே இல்லை என்ற மட்டில் பழகிப்போன விவகாரங்கள். லட்சுமி விரைவாக நடக்கிறாள். பின்னால் கள்ளின் வேகத்தில், ஆவேசமாகப் புரட்சிப் பிரசங்கம் செய்துகொண்டு மாமனார் வருகிறார். "உழவுத் தொழில் ஜீவாதாரமான தொழில். சேத்தில காலவச்சாத்தா சோத்தில கைய வைக்கலாம். சோத்தில கைய வைக்காம மனுசன் உசிர் வாழ முடியுமா? சொவர வச்சித்தா சித்திரம் அறிவு, படிப்பு, பட்டம், பதவி, ராச்சியம் எல்லாத்துக்கும் அடிப்படை இது. அடிப்படை தொழில் இது. சேத்தில இருக்குன்னு குழிதோண்டிப் புதைக் காம மேலே ஏத்தி வைக்கணும். இதுமேல, மத்ததெல்லாம் கீள. இதுதாம் புரட்சி, விவசாயம் முதத்தொழில் இதச் செய்யிறவனுக்கு அந்தசு, கவுரவம் வேணும். அத்தக் கொண்டு வருவது புரட்சி. இப்ப உழைக்காதவன் மேல; உழைப்பவன் கீள. இது மாறிய புரட்சி." லட்சுமிக்கு நடை விரைவுகூடப் பிடிக்கவில்லை. நெஞ்சம் கனிந்து கண்கள் பசைக்கின்றன. 'கள்ளுக் குடிச்சா எவ்வளவு தெளிவாப், பேசுறாரு!. 'அம்மா!...” இருட்டில் எட்டி ஒடிப் பின் தொடருபவள் அம்சுதான். “ஏண்டி இந்நேரமா நாயக்கர்வூட்டில இருந்த?” "மீனு வாங்கிக் கழுவி மெள்ளவா அரச்சிக் குடுத்தேன். நாகப்பட்டணத்திலேந்து சின்னய்யா வந்திருக்காரு. கோபு கூட இருக்காம்பா!'