பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 49 'இல்ல லட்சுமி, எனக்குத் தெரிஞ்சி, நம்ம பெரிய பண்ண நாயக்கரு மகன், ரத்தத்துல சக்கரன்னு மட்ராசிக்குத் தூக்கிட்டுப் போயி வருசமா வைத்தியம் பண்ணாங்க. அவனுக்கு இப்பிடிக் காலுலதா வந்து, பிறகு செத்தே போனான்." 'அட போங்க, அதயும் இதயும் ஏன் நினச்சிட்டு! அலட்டிக்காம படுத்துக்குங்க, நமக்கு அதெல்லா ஏன் வருது?" படுக்கச் சொல்லிவிட்டுப் போர்த்துகிறாள். கொசுக்கள் பாடுகின்றன. முன்பெல்லாம் சீமை எண்ணெயை எடுத்துப் பூசிக்கொள்வாள். இப்போது அதற்கும் பஞ்சம், சாம்பலையேனும் பூசிக்கொள்ளலாம் என்றால் அடுப்புச் சாம்பலில் கூடக் கைவைக்க முடியாது. திருநீற்றை எடுத்துத் தடவுகிறாள். நள்ளிரவு கடந்து வெகுநேரம் ஆகிவிட்டது. பின் தாழ்வாரத்து அறையில் விளக்கெடுத்துக் கொண்டுபோய்ப் பார்க்கிறாள். அமாவாசை நெருங்கும் நாட்களில் கொஞ்சம் ஒடிச்சாடுவான். மற்றபடி எந்த உபயோகமும் இல்லாமல் இப்படி ஒரு கடன் இருபத்தைந்து வயசு கடந்த பையன், இவன் எதற்குப் பிறப்பு எடுத்திருக்கிறான்! பல சமயங்களிலும் அவள் புருசன் இந்த அறியாப்பயலை அடிக்கும்போதும், கடுகடுக்கும்போதும் இவளுக்கு அவனை ஆற்றில் கொண்டு சென்று அமிழ்த்திவிட லாமா என்று தோன்றும். அந்த உள்மனதின் கரவை உணர்ந்து கொண்டிருப்பானோ என்னவோ? ஆற்றுப்பக்கமே வர மாட்டான். குளம், ஆறு என்றால் ஒரே பயம். நாய்க்குட்டிபோல் தண்ணிரைக் கண்டாலே பதுங்குவான். இவனை ஆற்றிலோ குளத்திலோ எட்டு நாட்களுக்கொருமுறை முழுக்காட்டுவ தென்றால் குடியிருப்பே கிடுகிடுக்கக் கூச்சல் போடுவான். இரண்டு மூன்று வயக வரையிலும் ஒன்றுமே தெரிய வில்லை. இவள் வயலில் வேலை செய்யப்போகும்போது புளிய மரத்தடியிலோ, புங்கமரத்தடியிலோ மற்ற பிள்ளைகளோடு விட்டுப்போவாள். கோபால் பிறந்து ஒன்னரை வயசில் பேசத் தொடங்கிவிட்டான். இது எச்சிலை ஒழுகவிட்டுக்கொண்டு கிடந்தது. இது. எத்தனையோ நாட்களில் பூச்சியோ எதோ தீண்டிப்போயிருக்கக் கூடாதா என்றுகூட உள்ளுற வேண்டி யிருக்கிறாள். ஆனால். பசிக்கிறது என்று சொல்லத்தெரியாத, சே -4