பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சேற்றில் மனிதர்கள் "அடாபா. இந்த கோபு ஒரு வார்த்த முன்னமே சொல்லி ருந்தாகூட அப்பாட்ட சொல்லி நான் எதானும் ஏற்பாடு செஞ்சிருப்பேன். நேத்து, உங்களப் பாத்த பிறகு, இவனத் தற்செயலா ராத்திரி பாத்ததுமே விசாரிச்சேன். அதா இப்பிடியே வந்தேன். வேணுங்கறவங்க எதுக்குக் கஷ்டப்படனும்?" முன்முடி இரண்டு நெற்றியில் விழுந்து அவனிடம் சரசம் பேசுகிறது. மோதிரம் போட்ட விரல், மினுமினுவென்ற பட்டைக்காலர் சட்டை அவன் மரியாதையான பேச்சு. காந்தியின் மனம் சிறகடித்துப் பறக்கிறது. 'எதுக்கும் நீங்க அப்பாவ வந்து ஒரு நடை பாத்துடுங்க. அப்பா நிச்சயம் செய்வாரு இப்ப கூட அப்பா சொல்வாரு யூ.ஜி. காலத்துல சம்முகம் தோசைப் பொட்டலத்தக் குச்சில துக்கிட்டு ஒடியாருவா. மேச்சாதிக்குக் குடுக்கிற சாப்பாட்டத் தொட்டாப் பாவம்னு அவருக்கு வருத்தம். அப்படி ஒரு காலத்துல ஒதவினவங்களுக்கு ஒத்தாச பண்ணனும்னா கண்டிப்பா மறுக்கமாட்டாரு...” = “காந்தி...!" கக்கல் கரைசலுடன் பீரிட்டடிக்கும் சினக்குரல் உள்ளிருந்து வந்து தாக்குகிறது. அவள் திடுக்கிட்டாற்போல் திரும்பி உள்ளே பார்க்கிறாள். "நான் உயிரோடு இல்லன்னு நினைச்சிட்டியாடீ?.” "என்னப்பா சொல்றீங்க...” "சொல்றேன். சுரக்காக்கி உப்பில்லன்னு நான் செத்துட்டனா? இல்ல, நான் செத்துட்டன.ான்னு கேக்குறேன்?" இந்தச் சாட்டை வீறலை எதிர்பார்த்திருந்தாலும் அவள் விக்கித்துப் போகிறாள். கோபு எழுந்து உள்ளே சென்று மெதுவான குரலில் கண்டனம் செய்கிறான். "இது உங்களுக்கே நல்லாருக்குதாப்பா? வாசல்ல அவன வச்சிட்டு ஏம்ப்பா மரியாதியில்லாம கத்தறிங்க?" "என்னடால என்ன மெரட்டுற? இது ஏ ஆடு. நா கத்துவேன், கூப்பிடுவேன். மரியாத இல்லன்னா போச்சொல்லு டா! என்னமோ பாலிசியாம், மயிராம்; வர்றானுவ சொந்தத்துக்கு ஒரு கட்சி மேலுக்கு ஒரு பேச்சி ஏண்டா, வீட்டக் கூறுபோட்டுப் போகவா இப்ப வந்த?” "ஏம்ப்பா வீனா ஆத்திரப்படுறீங்க?"