பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 75 சற்று எட்ட திடுதிடுவென்று குளத்தின் அமைதியையே கலக்கும் வண்ணம் கோவணத்துடன் ஒருவன் பாய்ந்து முழுகுகிறான். இவள் சட்டென்று கரையேறிச் சேலையை இழுக்கையில் அவன் குரல் இனிமையாய்ப் பாய்கிறது. "ஏ அதுக்குள்ளாற ஏறிட்ட? நா வந்திட்டேன்னா?” "பின்ன, பொம்பிள குளிக்கையில வந்து எருமகணக்கா வுழுந்தா?” குளத்தில் நெளியும் ஈரச்சேலையைப் பற்றி உதடுகளில் அழுத்திக்கொள்ளும் குறும்பில் இன்னும் கோபம் ஏறுகிறது அவளுக்கு. :இ." சேலையைப் பிடுங்கும் கோபத்தில் இனிமை கொப்புளிக் கிறது. ஏறி நெருங்கி வந்து அவள் எதிரே விழிகளைக் கூர்மையாக்கி, பார்த்துக்கொண்டே நிற்கிறான். வானின் செம்மையைக் கருமை முழுதுமாகத் துடைத்துவிடுகிறது. ஒற்றை நட்சத்திரம் கீழ்வானில் தோன்றுகிறது. 'அம்சு...” - ஈரச்சேலைமீது வளையும் கையை அகற்றுகிறாள். "உங்கம்மா என்னமே நினைச்சிட்டாங்களா அம்சு?” “என்னாத்துக்கு?” "நீ. நீ எனக்கும் சோறுவச்சியே அதுக்கு!” "இனிமே வீட்டுக்குப் போனாதா தெரியும். கோச்சிட்டா, அதுக்கு நீ என்ன செய்யப்போற?” "நா. நாளக்கி எங்கூட்டந்து சோறு கொண்டாந்து குடுப்பே.!” இடுப்பைப் பற்றி வளைத்து நீருள் இழுக்கிறான். இனிமைச் சிலிர்ப்புக்கள் உடலெங்கும் மின் துகளாய்ப் பரவுகின்றன. புதிய கன்றுக்குட்டியைத் தொட்டால் அது சிலி ர்ப்பது போல் அவள் நெளிகிறாள். "அம்சு, நாம் போயி, உங்கையாகிட்ட, முதலாளி, அம்சுவ நாங் கட்டிக்கிறேன். நா வேற பொண்ண நினைச்சிப் பாக்கமாட்டேன்னு சொல்லப்போறேன்." "ஐயோ, அவுசரப்பட்டா, எப்பிடி? எங்கக்கா கல்யாணம்