பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சேற்றில் மனிதர்கள் ஆகாம என்ன பத்திப் பேசுறதா...?" "உங்கக்கா கலியாணம் எப்ப ஆவும்..?” "அதெப்படி எனக்குத் தெரியும்?" "அதுவரைக்கும் நாம் பொறுக்கமுடியாது அம்சு..." “...எங்கையா, ஒருமான்னாலும் சொந்தமா நிலம் வச்சிருக்கிற ஆளா பாத்துதா கட்டிக்குடுக்கிறதாச் சொல்லிட்டிருக்காரு. ஏன்னா ஒரு நா சோறில்லாம மக இருக்கமாட்டான்னு அவருக்குத் தெரியும்." "பொஞ்சாதியவச்சிச் சோறுபோட்டுக் காப்பாத்தாத பயன்னு நினைச்சிருக்கிறாரா அவுரு?. எனக்குக் காலும் கையும் இருக்கு ஒரு மான்ன, வேலி வேலியா நெலம் இருந்திச்சி எங்களுக்கு மின்ன. ஒனக்குத் தெரியுமா?" "எங்க?" "அதா, நாகப்பட்ணத்துக்குக் கெளக்க. அம்புட்டும் எங்க நெலந்தா..." “நாகப்பட்ணத்துக்குக் கெளக்க... அப்பிடீன்னா கடலில்ல? "ஆமா. அதெல்லா நம்ம நெலந்தா. தண்ணியாப் போச்சு" ஒரே சிரிப்பு. "நாம ஒருக்க நாகபட்ணம் போவணும். கப்பல் பார்க்கணும்.” "என்னா பெரி.ய கப்பல்? நாம மானத்தில போற ஏரோபிளேனில பறக்கணும்னு சொல்லு அம்சு..." நீருக்குள் அவளை இறுக அனைத்துக் கொள்கிறான். காதோடு கேட்கிறான். "இப்ப மானத்தில் போறாப்பில, பறக்கிறாப்பல இல்லை?" 8 விளையாட்டுப்போல ஒருவாரத்துக்கு மேலாகிவிட்டது. சம்முகத்தால் நடக்க முடியவில்லை. வீக்கம் இருக்கிறது; மஞ்சளாகிப் பழுக்கவுமில்லை. காலையும் மாலையும் வரப்பிலும் வாய்க்காலிலும் நடக்கவேண்டிய ஒருவருக்கு முடங்கிக் கிடப்பதும் மிகக் கடினமாக இருக்கிறது. ஒருநடை டவுனுக்குப் போகலாம் என்றால்கூட, பஸ் நிற்குமிடம் வரையிலும் நடக்கமுடியாது. யாரிடமேனும் வண்டி