பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 91 அவரப் பாக்குறது?” "எப்படிங்க? இப்ப பஸ்ளலிருக்குதா?” "ம்...? பஸ்ஸாலதாம் போவணுமா காந்தி?” "பின்ன எப்படிங்க போறது?” "பின்னாடி உக்காந்தேன்னா அரமணில போயிடலாம். அப்பாவப் பாத்ததும் திரும்பிடலாம். பஸ்ஸுன்னா இங்கேந்து புதுக்குடி போயி வேற பஸ் புடிச்சிப் போவணும். சொல்லப் போனா, நானே அவரப் பாக்கத்தா இப்ப கிளம்பிட்டிருந்தேன்." 'பின்னாடி உட்காருதா. யாருனாச்சியும் பாத்துட்டா' என்ற அச்சத்தில் அடி வயிறு இலைபோல் ஒட்டிக்கொள்கிறது. 'நா... நா... எங்கப்பா, அம்மாட்டப் பொய் சொல்லிட்டு வந்திருக்கிறேன். அதுனால.” “என்ன பொய் சொன்ன?...” இதழ்களில் குறும்பு கொப்பளிக்க அவளைக் கவ்வி விடுபவன்போல் பார்க்கிறான். குறுகுறுப்பு நாடி நரம்பெல்லாம் பாய்கிறது. 'வீரமங்கலம் போயி சிநேகிதியப் பாக்கிறதா ச் சொன்னேன்.” ■ 'அவ்வளவுதானே? சும்மா பின்னாடி உக்காந்துக்க?” “எனக்கு அப்படியெல்லாம் உக்காந்து பழக்கமில்லிங்க பயமாயிருக்கு." "பழக்கம் எப்பிடி வரும்? உக்காந்தாத்தான வரும்? சும்மா உக்காந்துக்க?” அவளுக்குச் சொல்லொணாப் பிரபரப்பு. இருந்தாலும் தயக்கமும் தடைபோடுகிறது. தெருவில் யாரோ ஒரு ஆள் பார்த்துக் கொண்டே போகிறான். நின்று பேசுவது சரியல்ல சட்டென்று பின்புறத்து ஆசனத்தில் தாவி அமர்ந்துகொள்கிறாள் ஒரு பக்கமாகவே இரு கால்களையும் தொங்கவிட்டுக்கொண்டு கைகளால் ஆசனத்தைப் பற்றிக்கொள்கிறாள். நெஞ்சுத் துடிப்பு மிக விரைவாகிறது. - "கெட்டிமாப் புடிச்சிக்க...” "புடிச்சிட்டிருக்கிறேன்." "எங்க?" "சீட்டப் புடிச்சிட்டிருக்கிறேன்.” அவன் சிரிக்கிறான், திரும்பி.