பக்கம்:சைவமும் தமிழும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. சைவ சமய விளக்கு நோக்குங்கால், இறைவன் தன்மை வேறு, உலகின் தன்மை வேறு என்று காணப்படுவதால் பேதமாய் நிற்பது தெரிகின்றது. உலகத்தை இறைவன் தொழிற்படுத்தலே யன்றி, அதன் பொருட்டுத் தானும் உடன் தொழிற்பட்டு நின்றும் உலகம் போலத் தான் விகாரம் அடையாது நிற்றலை நோக்குங்கால் அபேதமாய் இருந்தே பேத மாகின்ற பேதனபேத என்ற நிலையைக் காணமுடிகின்றது. அவ்வாறு அபேதம், பேதம், பேதாபேதம் என மூன்றற் கும் பொதுவாய் நிற்கும் அத்துவித நிலையை மெய் கண்டார் அவையே தானேயாய்' என்ற ஒரு சிறு தொட ரால் மின்கைவிளக்கொளியைக் காட்டுவார். மேற் காட்டிய ‘மின்கைவிளக்கொளியை மெய் கண்டாரின் மாணாக்கர்கள் வின்ரித்து விளக்கியுள்ளனர். இதனையும் ஈண்டு எடுத்துக் காட்டுவது மிகவும் பொருத்த மாகும் என்று கருதுகின்றேன். அருணந்தி சிவாச்சாரியார் உலகெலாமாகி வேறாய் உடலுமாய்', என்று விளக் கினார். உமாபதி சிவமோ ப்ொற்பணிபோல் அபேதப் பிறப்பிலதாய் இருள் வொளி போல் பேதமும், சொற் பொருள் போல் பேதா பேதமும் இன்றி...உடல்-உயிர், கண்-அருக்கன், அறிவு-ஒளிபோல் பிரிவரும் அத்துவித மாகும் சிறப்பினதாய்' எனப் பிற மதங்களையும் எடுத்துக் காட்டி மறுத்தும், சித்தாந்தத்தை உவமை முகத்தால் இனிது விளக்கினார். இவர்களுள் அருணந்தி வாக்கினால் மெய்கண்டாரது அவையே தானேயாய்” என்ற தொடர், அவையேயாய் தானேயாய், அவையே தானேயாய் என இரட்டுற மொழிதலாம் நின்று. "முதல்வன், கலப்பினால் உலகத்தோடு ஒன்றேயாயும், பொருள் தன்மையால் வேறேயாயும், உயிர்க்கு உயிராதல் 41. சி. ஞா. போ. சூத். 2. 42. சித்தியார்-2. 43.