பக்கம்:சைவமும் தமிழும்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

镜6 சைவ சமய விளக்கு பொருள் தருவதை ஒர்த்து தெளிக. இம்மூன்று பொருள் களில் அத்துவிதம்' என்பதிலுள்ள நகாரத்திற்கு இன் மைப் பொருளும் மறுதலைப் பொருளும் கொண்டு ஒன்று' எனப் பிறரெல்லாம் பொருள் கூறுவர். ஆயினும், எண்ணுப் பெயர்மேல் வரும் நகாரம் அன்மைப் பொருளையன்றி வேறு பொருள் தராது." இது அநேகம்’ என்ற சொல்லால் தெளிவாகும். அநேகம்’ என்பது ஒன்றல்ல எனப் பொருள் தந்து பவ” என்றே பொருள் தருகின்றது. அதனால் துவிதம்’ என்னும் எண்ணுப் பெயர்மேல் வந்த நகாரமும் அன்மைப் பொருளே தருமாதலின்’, ’அத்து விதம் என்பது இரண்டாய் இருந்தே இரண்டல்லவாய் நிற்கும்’ எனப் பொருள்தரும்.’’- இந்த விளக்கத்தைச் சிந்தித்துத் தெளிவு பெறுக. இங்ங்னம் "அத்துவிதம் என்ற சொல்லுக்கு உண்மைப் பொருள் கண்டவர் மெய்கண்டார். இங்ங்னம் சுத்தாத்துவித மெய்யைக் கண்டு இனிது விளக்கினமைபற்றியே மெய் கண்டார் மெய்கண்டார் என்ற பெயர் பெற்றார் என்பதைக் ល្ខ , 45. இவ்விடத்தில் இன்மைக்கும் அன்மைக்கும் உள்ள வேறு பாட்டை நீ அறிதல் வேண்டும். இன்மை முற்றிலும் மறுப்பது; அன்மை சிறிது மறுத்துச் சிறிது உடன்படுவது. எ.டு. சாத்தன் இல்லை’ என்றால் அங்கு அவனோடு ஒத்த வேறொருவன் உளன் என்னும் பொருள் எவ்வாற் ஹானும் தோன்றாது. ஆனால், சாத்தன் அல்லன்' என்றால், அவனோடு ஒருவாற்றான் ஒத்த வேறொருவன் உளன் என்ற பொருள் தோன்றும். அதுபோலவே, 'இரண்டு இல்லை என்றால் அங்கு இரண்டு என்பதற்கு ஒத்த பொருள் உண்டு என்பது எவ்வாற்றானும் பெறப் படாது. ஆனால், இரண்டு அல்ல’ என்றால், அங்கு ஒரு வாற்றான் இரண்டு எனற்கு ஒத்தபொருள் உண்டு’ என்பது பெறப்படும். இதுவே இன்மைக்கும் அன்மைக்கும் உள்ள வேறு பாடாகும் என்பதை அறிந்து தெளிக.