பக்கம்:சைவமும் தமிழும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் §7 பொய்கண்டார் காணப் புனிதமெனும், அத்துவித மெய்கண்ட நாதன் அருள் மேவுநாள் எங்கானோ: என்று கூறியிருத்தலால் தெளிலாம். தாயுமானவரின் கொள்கையும் "சுத்தாத்துவிதம்' எனபதனை, அத்துவிதம் பெறும்பேரென்று அறியாமல் யான் எனும்பேய் அகந்தை யோடு மத்தமதி யினர்போல மனங்கிடப்ப - இன்னம் இன்னம் வருந்து வேனே : என்ற அவர் வாக்காலேயே கண்டு தெளியலாம். சுத்தாத்துவிதக் கொள்கையை விளக்க மூன்று உவமைகள் கூறப் பெறும். இவற்றையும் ஈண்டு விளக்கு வது பொருத்தமாகும். இறைவன் உயிர்களோடு கலப் பினால் ஒன்றால் நிற்றற்கு உடலும், உயிரும் போல' என்ற உவமை கூறுவது வழக்கம். உடலில் உயிரி, அது எனத் தான் என வேற்றுமையின்றி அதுவேயாய்க் கலந்து நிற்றலை மெய்கண்டார் உடலுக்கு இட்ட பெயரை, அதாவது சாத்தன், கொற்றன் முதலிய பெயர்களைச் சொல்லி அழைக்கும்பொழுது உயிர் தன்னையே அழைத் ததாகக் கொண்டு ஏன்?’ என்று கேட்பதை எடுத்துத் காட்டி விளக்குவார். இங்கு உயிர் உடம்பெனத் தானென வேற்றுமையின்றி அபேதமாய் நிற்றல் கண்டு தெளியலாம். 46. தாயு. பாடல்: எந்நாட்கண்ணி- குரு மரபின் வணக்கம்) இங்குப் புனிதமெனும் அத்துவிதம்'என்பது சுத்தாத்து விதம்’ ஆகும். 47. டிெ. ஆசையெனும்