பக்கம்:சைவமும் தமிழும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. சைவ சமய விளக்கு இதனை மேலும் விளக்குவேன். இங்கு உயிர் உடலோடு ஒட்டி நிற்கும்போ உயிர் உயிரே, உடம்பு உடம்பே; உrம்:உயிர் ఏళీ: உடம்பும் உயிராக மாட்டாது. அவ்வாறாயினும் உயிர் உடம்பாயும் அதனின் வேறாயும் நிற்கும்; உடம்பு அங்ஙனம் நில்லாது. அதுபோல முதல்வன் முதல்வனே; உயிர் உயிரே;முதல்வன் உயிராக மாட்டான்; உயிர் முதல்வனாக மாட்டாது. அவ்வாறாயினும், முதல்வன் உயிராயும் அதனின் வேறாயும் நிற்பன்: உயிர் அங்ஙனம் நில்லாது." இறைவன் பொருட்டண்மையால் வேறாதற்குக் "கண்ணருக்கன் போல்’ (கண்ணொளியும் கதிரவன் ஒளி யும் போல) என்று உவமை கூறப்பெறும். இதனையும் விளக்குவேன். கண்ணொளியும் கதிரவன் ஒளியும், இருளும் ஒளியும் போலத் தொடர்பே இல்லாத வேறு வேறு பொருளாகாது; இரண்டும் கலந்து நின்றே பொருள் தன்மையால் வேறாகின்றது. கண்ணொளியால் பொரு ளைக் காண்கின்றோம்; கதிரவன் ஒளி பொருளைக் காட்டு கின்றது. இவையே இவற்றின் வேறுபட்ட தன்மைகள், உடலினின்றும் உயிர் வேறு காணப்படாமையின் வேறா தற்கு இவ்வுவமை கூறி விளக்கப்படுகின்றது. உயிர்க்கு உயிராதல் தன்மையால் உடனாதற்கு கண்ணொளியும் ஆன்மபோதமும் (உயிர் அறிவும்) போல’ என்ற உவமை கூறப்பெறுகின்றது. இதனையும் விளக்கு வேன். கண்ணொளியும் ஆன்ம போதமும், சொல்லும் பொருளும் போல அன்றி, கண் ஒரு பொருளைக் கானும் பொழுது ஆன்மபோதமும் உடன் சென்றே கண்டு அப் பொருளை இன்னதென அறிகின்றது. இதனால் 48. சி. ஞா. போ , 2-ஆம்குத். அதிகரணம். 1. சுட்டு முறுப்பும் என்ற வெண்பாவையும் அதன் உரையையும் காண்க (சிற்துரை),