பக்கம்:சைவமும் தமிழும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் - §§ உடனாதற்கு இவ்வுவமை சொல்லப் பட்டது என்பதை அறிந்து தெளிக. ே - - இவ்வாறு இறைவன் உலகத்தோடு ஒன்றாயும், வேறாயும், உடனாயும் இருத்தலை மெய்கண்டாருக்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பிருந்த ஞான சம்பந்தப் பெரு மான் தமது திருவிழிமிழலைத் திருப்பதிகத்துள் கூறி யுள்ளமை ஈண்டு உளங்கொள்ளத்தக்கது. 49. மேற்கூறிய மூன்று தன்மைகளில் ஒவ்வொன்றை மாத்திரமே கூறும் ஒவ்வொரு சாரார் உள்ளனர். இறை வனும் உயிர்களும் ஒன்றே என்பவர் பொன்னும் பணியும் போல்’ என்ற உவமை கூறுவர். இவர்கள் அபேத வாதம் கூறுவோர். இவர்கள் தம் கொள்கை நிலை பெறுவதற்கு, "பிரம்மம் கேவலம், அத்துவிதம் என, அத்துவிதம் என்ப தனோடு கேவலம் என்ற ஒரு சொல்லைச் சேர்த்துப் பொருள் கொள்வர். இதனால் இவரது கொள்கை கேவலாத்துவிதம் எனப்படும். இறைவனும் உயிர்களும் வேறே என்பவர் ஒளியும் இருளும் போல்’ என்ற உவமை கூறுவர். இவர்கள் துவிதிகள். இவர்கள் பேத வாதிகள்; இவர்தம் கொள்கை பேத வாதம். இவர்களது சமயம் ‘துவைதம்’ என்பது. இறைவனும் உயிரும் ஒன்றும் வேறும் என்பவர் சொல்லும் பொருளும் போல்' என்று உவமை கூறுவர். இவர்கள் கொள்கை பேத பேதம்’ என்பது; இது பேதம், அபேதம்’ என்ற இரண்டையும் கொண்டு நிற்றல். சொல்லும்'. அதன் பொருளும் வேறு வேறாயிருப்பினும், சொல்லைச் சொன்னவுடன் அதன் பொருள் உடன் தோன்றுதலால், ஒன்றாகவும் உள்ளன என்பது இவர்தம் கருத்து. இவர்கள் தம் கொள்கை நிலை பெறுவதற்கு, பிரம்மவிசிட்டத்தினால் அத்துவிதம் எண், "அத்துவிதம் என்பதனோடு விசிட்டம்’ என்ற ஒரு சொல்லைச் சேர்த்துப் பொருள் கொள்வர்; இதனால் இவர் தம் கொள்கை விசிட்டாத்துவிதம்'என்று சொல்லப் பெறும். மெய்கண்டார் தமது கொள்கையின் பொருட்டு அத்துவிதம் என்பதனோடு யாதொரு சிெல்ை சேர்க்காமல் அப்படியே வைத்துப் பொருள் ெ --- அவரது கொள்கை சுத்தாத்துவிதம் என்று வழ்ங்குகின்றது.