பக்கம்:சைவமும் தமிழும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சைவ சமய விளக்கு ஈறாய்முதல் ஒன்றாய்இரு பெண் ஆண்குணம் மூன்றாய் மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய் ஆறாய்சுவை ஏழோசையொடு எட்டுத்திசை தானாய் வேறாய்உடன் ஆனான் இடம் விழிம்மிழ லையே." என்ற திருப்பாடலால் அறிந்து தெளியலாம். இதனை மெய்கண்டாருக்கு முன்பிருந்த திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் என்பவர் தமது திருக்களிற்றுப் படியார் என் நூலில், - ஈறாகி அங்கே முதல்ஒன்றாய் ஈங்கிரண்டாய் மாறாத எண்வகையாய் மற்றிவற்றின்-வேறாய் உடனாய் இருக்கும் உருவுடைமை என்றும் கடனாய் இருக்கின்றான் காண்.: என்று கூறியிருத்தலையும் கண்டு தெளியலாம். இவற்றால் சைவ சமயம் 'இறைவன் உலகத்தோடு ஒன்றாய், வேறாய், உடனாய் இருக்கின்றான்’ என்று தொன்று தொட்டுக் கூறிவருதல் தெள்ளிதின் விளங்கும். முதல்வனாகிய ஒரு பொருளிடத்து இம்மூவேறு தன்மை களும் ஒருங்கு கூடியிருத்தலை-அத்து விதமாயிருத்தலைமெய்கண்டார் அருமையாகத் தெளிவாக்குவார்." 50. தேவாரம் 1.11:2 51. களிறு-88 53. சி. ஞா போ. குத்-2. அதி-1.