பக்கம்:சைவமும் தமிழும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் ገ ! அரக்கை உருக்கி அதனொடு கற்பொடி சேர்த்துச் சாணை செய்யப்படுதலை நீ அறிவாய், இச்சாணையில் கல் அரக் கொடு உடன் விரவிக் கிடக்கின்றது. இவ்விரண்டும் தன் தன் தன்மையில் குறைவுபடவில்லை. சேர்த்துப் பிடிக்கும் தன்மையாகிய அரக்கின் தன்மையும், கத்தியினைக் கூர்மைப்படுத்துத் தன்மையாகிய கல்லின் தன்மையுமாகிய இரண்டு தன்மைகளும் சாணையிற் காணப்படுகின்றன. இச்சாணையில் கல் தன் சுய வடிவத்தில் காணப்படாது அரக்கொடு அரக்காய்க் காணப்படுகின்றது. எனவே, சாணை என்னும் ஒரு பொருளில் மூவேறு தன்மைகள் ஒருங்கு கூடியிருக்கக் காண்கிறோம். அது போலவே முதல்வன்பாலும் இறத்தல் பிறத்தல் புரியும் உயிர் களோடு ஒன்றாந் தன்மை வ்ேறாந் தன்மை உடனாத் தன்மை ஆகிய மூன்று தன்மைகளும் ஒருங்கிருத்தல் கூடும். இம்மூவேறு தன்மைகளின் சேர்க்கையே அத்துவிதத் தன்மை எனப்படும். இத்தன்மையோடு கூடி நின்றே இறைவன் அவ்வுயிர்கள் இறத்தல் பிறத்தல் புரிதம் பொருட்டு உபகரிக்கின்றான் என்பதைத் தெளிக. இத் தன்மையை உணர்த்தவே முதல்வன் அவையேயாய், தானே. யாய், அவையேதானேயாய்” நிற்கும் என்று கூறினார் மெய் கண்டார். இந்தச் சுத்தாத்துவிதத் தன்மையையே திரு முறைகளும் பேசுகின்றன. இங்ங்னம் முத்தொழில்களையும் சித்தாய், அதினும் சூக்கும சித்தாய் நிற்கும் இறைவனே, ஏனைய எல்லாப் பொருட்கும் பரம ஆதாரமாய் நிற்றலன்றி, அவனுக்கு ஒர் ஆதாரம் வேண்டாமையும் பெறப்படும். இதனால் கருத்தாவாதல் மாத்திரத்துக்கு எடுத்துக் காட்டப்படும் 'குயவன்’ என்னும் .பமானம். ற்றி 'குயவனுக்கு ஆதாரம் இருத்தல் போல, இறைவனுக்கும் ஒர் ஆதாரம் உண்டோ? என்னும் ஐயத்திற்கு இடன் இல்லை. இதனை அருணத்தி சிவாசாரியார், urഷജmlistinുംilmanം:~ം:ൺ 58. சி. ஞா. போ. சூத்-2,