பக்கம்:சைவமும் தமிழும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சைவ சமய விளக்கு ஞாலம் ஏழினையும் தந்து நிறுத்திப்பின் நாசம் பண்ணும் காலமே போலக் கொள்t கிலைசெயல் கடவுட் கண்ணே." என விளக்குவர். அஃதாவது, "எல்லாப் பொருள்களையும் ஆக்கியும், வளர்த்தும், அழித்தும் நிற்கும் கால தத்துவம், தனக்கு ஒர் ஆதாரம் இன்றி நின்றே அவற்றைச் செய்தல் போல, இறைவனும் ஆதாரம் இன்றி நின்றே தன் செயலைச் செய்வன்' என்பதாகும். இதனால், 'குடம் முதலிய செயப்படு பொருள்கட்குக் கருத்தாவாகிய குயவன் அவற்றின் வேறாய் நிற்றல் போல, உலகமாகிய செயப்படு பொருள் கட்குக் கருத்தாவாகிய இறைவன் அதனின் வேறாய் நில்லாது அத்துவிதமாய் நின்றே தொழிற்படுத்துவன்' என்பதும் தெளியப்படும். இன்னும், "படைத்துக் காத்து அழிக்கப்படும் உலகத் தால் பயன் பெறுவன உயிர்களே; அதனால் அவை குயவன் செய்யும் குடம் முதலியவற்றைப் பெற்றுப் பயன் அடையும் மக்கள் போல்வனவாகும். குயவன் அம்மக்களின் வேறாய் இருத்தல் போல, இறைவன் உயிர்களின் வேறாய் நில்லாது, அவற்றோடு அத்துவிதமாய் நின்றே அவற்றின் பொருட்டுத் தனது தொழிலைச் செய்வன்' என்பதும் இதனாலே விளங்கும். இத்துடன் இக்கடிதம் நிறைவு பெறு கின்றது. . . . . . . " அன்டன், கார்த்திகேயன்.

  1. O அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு,

நலம். நலனே விளைந்திடுக. அத்து விதமாய்” இருக்கும் இறைவன் உலகத்தைச் செயற்படுத்தும் முறையை இக்கடிதத்தில் விளக்குவேன்.

54,