பக்கம்:சைவமும் தமிழும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 73 பேரறிவும் பேராற்றலும் பெருங் கருணையும் உடைய இறைவன், 'உயிர்கட்கு நலம் செய்தல் வேண்டும்’ என்னும் கருத்தோடு படைத்தல் முதலிய செயல்களைச் செய் கின்றான் என்பதை நீ ஒருவாறு நன்கு அறிவாய். ஆயினும், சேதநப் பிரபஞ்சத்தையும், அசேதநப் பிரபஞ் சத்தையும் ஒரு படித்தாகப் படைக்காமல் வெவ்வேறு விதமாகப் படைத்துள்ளான். சேதநப் பிரபஞ்சத்தில் மக்கள், பறவை, விலங்கு, தாவரம்’ என்று பல்வேறு இனங்கள்; இங்ஙனம் படைக்கப் பெறும் ஒர் இனத்துள்ளும் உயர்ந்தோர்-தாழ்ந்தோர், நிரம்பிய உறுப்பினர்-குறை உறுப்பினர், செல்வர்-வறி யவர், கருடன்-ஊர்க்குருவி, புலி-மான், பசு-எருமை, புல்-மரம் என்று எத்தனையோ வேறுபாடுகளுடன் காணப்பெறுகின்றன. இவற்றால் உறவும் - பகையும், வாழ்வும்-தாழ்வும், இன்பமும்- துன்பமும், சிறிது காலம் வாழ்வனவும் நெடுங்காலம் வாழ்வனவும், வாழ்வதற்குரிய காலம் முழுதும் வாழாது இடையிலே அழிவனவுமாய்இங்ங்னம் பல்வேறு விதமாக, பலபடியாகக் காணப்படு கின்றன. அசேதநப் பிரபஞ்சத்திலும் மண்ணுலகம்-பொன் னுலகம், ஒளியுலகம்-இருள் உலகம், காடு-நாடு, மலைமடு என்று இங்ங்ணம், பலதிறப்பட்டனவாகவே காணப் படுகின்றன. ஆகவே, இவற்றையெல்லாம் ஆக்கியும், அளித்தும், அழித்தும் நடத்துகின்ற இறைவன் எந்த ஒழுங் கில், எந்த நியதிப்படிச் செய்கின்றான்? இதனால் யாருக்கு என்ன பயன்? உயிர்கள் பயன் அடைந்தால், அதனை அவை எவ்வாறு பயன் அடைகின்றன?-இன்னோரன்ன ஐயங்கள் நின்பால் எழலாம். இவற்றை விளக்குவது இன்றியமையாததாகின்றது. இறைவன் இங்ஙனம் படைத்தல் தன் கருத்துப்படி யன்று; உயிர்களின் கருத்துப்படியேயாகும். அது மண்ணி