பக்கம்:சைவமும் தமிழும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சைவ சமய விளக்கு லிருந்து பாண்டங்களைச் செய்யும் குலாலன் அவற்றைத் தன் கருத்துப்படிச் செய்யாமல்,கொள்வோர் கருத்துப்படிக் குடம், சால், பானை, கரகம் முதலாகவும், அவற்றைச் சிறியனவும் பெரியனவுமாகவும் பலபடச் செய்தல் போலாகும் என்று சொல்லி வைக்கலாம். இவ்வாறு செய் யும் ஒழுங்கு முறையை வினை அல்லது கன்மம் என்று விளக்குவர் சித்தாந்திகள். அவரவர் வினைக் கேற்றவாறு படைத்தல் இறைவனின் நடுவுநிலையே யன்றி நடுவுநிலை பிறழ்ந்த நிலையாகாது. வேண்டுவார் வேண்டுவதை முன் னின்று கொடுத்தல் கருணையே யன்றி வன்கண்மை ஆகாது. வேண்டத் தக்க தறிவோய்ே வேண்ட முழுதும் தருவோய் நீ வேண்டும் அயன்மாற் கரியோய்ே வேண்டி யென்னைப் பணிகொண்டாய்." என்று மணிவாசகப் பெருமான் கூறுவது இந்த நியதியைத் தான் என்று கருதலாம். இவ்வாறு இறைவன் தனது செயல்களை வினை வழியே செய்வது வினையின் ஆற்ற லைக் கடந்து தன் விருப்பின்வழி நடக்க மாட்டாமையால் அன்று. பல்லுயிர்களின் பயன் கருதியேயாகும். செங்கோல் நடத்தும் அரசர்கள் தங்கள் செயல்களை அரசியல் முறைப் படி நடத்துதல் போலாகும் இறைவன் வினைவழியே தன் செயலை நடத்துவதும் என்று இதனை ஒருவாறு விளக்க லாம். வினையையும் அரசியல் நெறியையும் ஒப்பிட்டு அறியின் இது நினக்கு நன்கு விளங்கும். இன்னோர் ஐயமும் நின்பால் எழ வழியுண்டு. உயிர்கள் உடம்பைக் கொண்டுதானே வினையைச் செய்தல் கூடும்? உடம்பு இல்லாதபோது வினை ஏது? வினை இல்லாதபோது உடம்புகள் எங்ங்ணம் அமையும்? இந்த 55. திருவா. குழைத்தபத்து-5