பக்கம்:சைவமும் தமிழும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் *引 ஐயம் எல்லோர்க்கும் ஏற்படுவதுதான். இதனை விளக்கு வதும் இன்றியமையாததாகின்றது. இது விதை முதலா? மரம் முதலா?’ என்ற ஐயத்தைப் போன்றது. மரத்திற்குக் காரணம் விதை; விதைக்குக் காரணம் மரம். இவ்விரண்டில் ஒன்று இல்லாதபொழுது மற்றொன்று இல்லை என்பது தெளிவு. ஆனால் இவை முதன் முதலில் எப்படி உண்டாயின? என்ற வினாவிற்கு ஒருவராலும் விடை அறியக் கூடியதாக இல்லை. இரண்டில் இன்னதுதான் முதல்’ என்று உறுதிப்படுத்துவதற்குத் தக்க சான்றுகள் இல்லையாயிலும் விதையினால் மரமும் மரத்தினால் விதையும் உண்டாகின்றன’ என்ற உண்மையை மறுக்க முடியாது, இது போலவே வினையும் உடம்பும் ஆகிய இரண்டில் இன்னது முதல்’ என்பதை உறுதிப்படுத்த இயலாவிடினும், இரண்டில் ஒன்று எவ்வகையிலோ முதலில் தோன்றியிருத்தல் வேண்டும்; அதன் பின்னர் அவர் காரண காரியத் தொடர்பால் ஒன்றால் மற்றொன்று தோன்றித் தொடர்ந்து வருகின்றன என்றுதான் நாம் முடிவு செய்தல் வேண்டும். உயிர்கள் இன்பத்தை விரும்புவதன்றி துன்பத்தை விரும்புவதில்லை; அங்ங்னமே, அறிவும் ஆற்றலும், உடல் உறுப்பும் அழகும், செல்வமும், வாழ் நாளும் குறைந்து நிற்றலையும் எந்த உயிரும் விரும்புவதில்லைதான். ஆயினும், அக்குறைபாடுகளைத் தரும் காரணத்தை விரும்பு கின்றன. பிறப்பே துன்பம் உடையது; அதனைத் தருவது இறைவனின் விருப்பமன்று. ஆயினும், உயிர்கள் இவ்வுல கத்தில் ஏதோ இன்பம் இருப்பதாக நினைத்து அதனை நுகர்தற்குப் பிறப்பை எடுக்க விரும்புகின்றன. அவ்வின் பமும் பலவகைப்படுவதாக அமைகின்றது. ஆயின், உலக இன்பமோ முட்செடியில் உள்ள மலர் போன்றுள்ளது. அதாவது, பெருந்துன்பத்தின் பயனாகச் சிறிது இன்பம் விளைகின்றது. முட்கள் பலவற்றால் கீறப்பட்ட பின்பே முட்செடியில் உள்ள ஒரு மலரைப் பறிக்க முடிவது