பக்கம்:சைவமும் தமிழும்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் ን? வரும் இன்ப துன்பங்களில் அழுந்துதல் அவற்றின் மேலுள்ள விருப்பு வெறுப்புகளே காரணமாகும். இவ்விருப்பு வெறுப்புகள் ஆணவ மலத்தின் செயல்களாகும். உயிர் களால் விரும்பவும் வெறுக்கவும் படுகின்ற இன்ப துன்பங்' களை விளைப்பது வினையாகிய கன்ம மலமாகும், ஆதவின் ஆணவமலத்தால் விருப்பு வெறுப்புகளை உடையதாய் நிற்கும் உயிர் அவ்விருப்பு வெறுப்புகளுக்கு விடயமாகிய இன்பதுன்பங்களைத் தருகின்ற கன்ம மலத்தோடு தான் முதற்கண் தொடர்வதாகின்றது. இதனால் கன்மமே முதலில் ஆன்மாவைப் பற்றுகின்றது என்பது தெளிவு. இதனால் ஆணவத்தின் காரியம் கன்மமும், கன்மத்தின் காரியம் மாயையும் ஆதல் விளங்கும், கன்மம் ஆணவத்தின் காரியமேயன்றி மாயையின் காரிய மன்று என்பதைத் திருவள்ளுவரும், "இருள்சேர் இரு வினை' என்று குறிப்பிடுவதையும் காணலாம். பரிமேலழ கரும் இன்னதன்மைத்தென ஒருவராலும் கூறப்படாமை யின் அவிச்சையை இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற் கேதுவாகலான் இருவினையும் சேராவென்றும் கூறினார்' என்று கூறுவதனாலும் இதனைத் தெளியலாம். இதனை மேலும் தெளிவிப்பேன். இன்பதுன்பங்க ளுக்கு.விதை போல்வது கன்ம மலம், அவ்விதை முளைத்து வேரூன்றி வளர்ந்து, மற்றும் பலவிதைகளைத் தருவதற்குச் சார்பாய் உள்ள நிலத்தின் ஆற்றல் போல்வது ஆணவ மலம். அவ்வாற்றலை உடைய நிலம் போல்வது ஆன்மா. விதையை முளைப்பித்து, நிலத்தின் ஆற்றலையும் வெளிப் படுத்தி முளையை நிலத்தோடு இயைவிக்கும் நீர்போல்வது மாயாமலம் முதலில் நிலமும் பின்னர் அதன் ஆற்றலும் வேண்டப்படும். அதன்பின் வேண்டப்படுவது விதை. இவை யெல்லாம் அமைந்தபின் வேண்டப் பெறுவதே நீர். இவை போலவே, ஆன்மா, ஆணவம், கன்மம், மாயை' என்ப

                • «assa:

56. குறள்-5