பக்கம்:சைவமும் தமிழும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 சைவ சமய விளக்கு வற்றையும் பொருந்திப் பார்த்து உண்மையைக் கண்டு தெளிக. இப்படித் தெளிந்தாலும், இவற்றின் செயற் பாடுகளுக்கு முன்பின் கூறுதல் அரிதாகும், இதனால்தான் சைவ சித்தாந்தம் இவையனைத்தையும் அனாதி என்று கூறுகின்றது. உயிர்கள்தோறும் ஆணவமலப் பிணிப்பும் ஒருவகை யாய் இராது. அது பலவகையாயிருத்தலின் அவற்றின் விருப்பு வெறுப்புகளும் பலவகையாக இருக்கும் என்பது தெளிவு. ஆகவே, அவற்றிற்கேற்ப வரும் வினை வகைகளும் பலதிறத்தனவாக இருக்கும். அவ்வகைகளுக்கேற்பவே உங்டம்புகளும் பல வகையாய் அமையும். இவை யனைத் தையும் அறிந்து இறைவன் அவ்வவற்றிற்கேற்றவாறு கூட்டுவிக்கின்றான் என்பதை அறிந்து தெளிக. இவ்வாறு இறைவன் இருவகைப் பிரபஞ்சங்களையும் செயற்படுத்து கின்றான் என்பதை ஒர்ந்து அறிக. . . . அன்பன், கார்த்திகேயன். †† அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன். நலம் பல விளைவதாகுக. இறைவன் உலகத்தைச் செயற்படுத்துங்கால் உருவத் தையுடையவனாய் நின்றுதான் செயற்படுத்துகின்றான். உருவம் இல்லாத உயிர் உடலை இயக்கச் செயற்படுத்துவது போல, உலகிற்கு உயிராய் நிற்கும் இறைவன் உருவம் இன்றியே அதனைச் செயற்படுத்தக் கூடுமாயினும், உலகத் தின் செயற்பாடு உயிக்கட்குப் பயன்படுதற்பொருட்டே உருவமுடையவன் ஆகின்றான். சில எடுத்துக் காட்டு கள் இதனைத் தெளிவாக்கும்.