பக்கம்:சைவமும் தமிழும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 7$ ஆனைமுகக் கடவுள், முருகக் கடவுள் போன்றாரை இறைவன் உருவமின்றியே தருதல் கூடுமாயினும், அவர்கள் இறைவனின் திருக்குமாரர்கள் என நின்று அவர்தம் அறக் கருணைக்கும் மறக்கருணைக்கும் உரியராயினார் என்பதை உணர்ந்து அப்பயனைப் .ெ ப று த ல் கூடாமையின் அன்னோரை இறைவன் உருவங்கொள்ளச் செய்துள்ளான். கொடிய பன்றியைக் கொன்று அர்ச்சுனனைக் காத்துப் பாசு பதம் கொடுத்ததும் உருவத்துடன் நின்றுதான் செய்தான். உருவமின்றிச் செய்யின், பார்த் தன் அதனைத் தெளிந்து பயன் கொள்ளுதல் இயலாது. கல்லாவின் கீழிருந்து சனகாதி முனிவர் நால்வர்க்கும் மெய்யுணர்வைத் தரும் போது உருவம் இன்றியமையாதது என்பதைச் சொல்ல வேண்டா. ஆகவே, பயன் பெறுதற்கு உரியார் பயன் பெறுதற் பொருட்டே இறைவன் உருவங்கொண்டு செய் வான் என்பது தெளிவாகின்ற தன்றோ? - இன்னோர் உண்மையையும் ஈண்டு நீ சிந்தித்து உணர்தல் வேண்டும். பிறவிக் கடலில் விழாத பெருமையு டையவனாகிய இறைவன் பிற விக் கடலில் வீழ்ந்த உயிர் கட்கெல்லாம் உடம்புகளைத் தருபவனாதலின், அவன் தனக்கு வேண்டும் உடம்பைத் தானே தன் இச்சையால் கொள்வன் என்பதை அறிக. மேலும், மலமுடைய உயிர் கள் கொள்ளும் உருவத்திற்கு உரிய குற்றங்கள் யாவும் இறைவன் கொள்ளும் உருவத்திற்கு இல்லை. இறைவன் மலமற்றவனாதலின், மலத்தின் தொடர்பு அவனுக்கு உண்டாதல் இல்லை. அவனுக்கு அவனது சக்தியாகிய அருளே உருவமாய் அமைதலால் அவன் கொள்ளும் திருமேனிகள் யாவும் அருட்டிரு மேனிகளாகும் என்பதை யும் தெளிக. அன்றியும், அவன் உருவத்துடன் நின்று ஐந்தொழில்களை ஆற்றும்போது, நம்மைப் போல் கருவி களைக் கொண்டு செய்யாது, சங்கற்ப (நினைவு) மாத்திரை யிற்செய்தலால், நமக்கு வரும் இளைப்பு, களைப்பு, விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம் போன்ற வேறுபாடுகள் அவனை அடையமாட்டா. இதனை மெய்கண்டார்,