பக்கம்:சைவமும் தமிழும்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 8 நாயகன் எல்லா ஞானத் தொழில்முதல் கண்ண லாலே காயமோ மாயை யன்று; காண்பது சக்தி தன்னால்" என்பது சிவஞான சித்தியார். சக்தி என்பது இறைவனது திருவருள் என்பதை நீ அறிவாய். ஆகவே, இறைவனது திருமேனியும், அவற்றில் அமைந்த படைக்கலம், ஆடை, அணிகலம் முதலியனவும், அவன் எழுந்தருளியிருக்கின்ற இடமும், அவற்றைக் கொண்டு ஆற்றுகின்ற செயல்களும் அவனது அருளாலன்றி வேறில்லை. இவற்றை, - உருவருள்; குணங்க ளோடும் உணர்வருள் உருவில் தோன்றும் கருமமும் அருள்: அசன்றன் கgசர ணாதி சாங்கம் தரும்அருள்: உபாங்க மெல்லாங் தான் அருள்; தனக்கொன் நின்றி அருள்உரு உயிருக் கென்றே ஆக்கினன் அசிந்த னன்றே.60 என்பது அருணந்தியின் வாக்கு. இத் திருப்பாடலில் இறை வன் உருவங்கொள்ளுதல் தன் பொருட்டன்றி உயிர்களின் பொருட்டேயாகும்’ என துலைப் பெற்றிருத்தலைக் கண்டு மகிழ்க. அதாவது, எச்செயலையும் அவன் உருவம் இன்றியே செய்ய வல்லனாயினும், உருவங்கொள்ளாவிடில், உயிர்கள் அவனை அறிய மாட்டா என்பது பற்றியே இறைவன் உருவங் கொள்கின்றான்’ என்ற விளக்கமும் இதில் குறிப்பாகப் புலப்படுவதைக் கண்டு தெளிக. தியானத்திற்கு உருவம் மிகவும் இன்றியமையாதது. உருவம் இல்லாத பொருளை உயிர்கள் மனத்தால் தினைக் 59. சித்தியார்-1.42 ۶۰ 4- استخوانیم: -64 சை. ச. வி.-6