பக்கம்:சைவமும் தமிழும்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சைவ சமய விளக்கு கவும் இயலாது. ஆதலின் அவை தன்னை நினைந்தும் வாழ்த்தியும் வணங்கியும் உய்தல் வேண்டும் என்னும் பெருங்கருணையால் இறைவன் பலவகைத் திருமேனி களைக் கொள்ளுகின்றான் என்பதை அறிக உருவமின்றி இவற்றைச் செய்தல் இயலாது. அவ்வாறு செய்ய முயலுங் கால் இறைவனையன்றி வேறொன்றையே நினைக்க வேண்டி வரும். அதாவது, கடவுள்' என்ற சொல்லையோ அல்லது கடவுளைப்பற்றின பாடலின் வடிவங்களையோ, பாடலைப் பாடிய அல்லது இறைவனைப்பற்றி உபதே சித்த ஆசிரியரையோ நின்ைக்க வேண்டி வருமேயன்றி இறைவனை நினைத்தல் இயலாது. இதனால் இறைவ னுக்கு உருவம் இன்றியமையாததாகின்றது. . முன்னொரு கடிதத்தில்" இறைவன் கொள்ளும் வடிவங்களைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அவற்றை ஈண்டு நினைவு கூர்க. அவற்றை ஈண்டு மீண்டும் தெளி வாக, விரிவாக, விளக்குவேன். வடிவம் என்பன யாவும் அருவம், உருவம், அருவுருவம்’ என்னும் மூவகையினு:ள் அடங்கும். அருவம் என்பது காட்சியளவையால் அறியப் படாது கருதலளவையால் அறியப்படுவது. எ.டு. ஆகாயம் முதலியவை, உருவம் என்பது காட்சியால் அறியப்படுவது. எ.டு. நிலம், நீர் முதலியவை. அருவுருவம் என்பது, ஒரு கால் காட்சியால் அறியப்பட்டும், ஒருகால் காட்சியால் அறியப்படாமலும் இருப்பது. எ.டு. தீ முதலியவை. காற்று கண்ணுக்குப் புலனாகாவிடினும் ஊற்றுணர்விற்குப் புலனா வதால் உருவமுடையதாகக் கொள்ளப்படும். கண்ணுக்குப் புலனாகாமைப்பற்றி அருவம் எனக் கொள்ளலும் உண்டு. இறைவனுடைய திருமேனிகளை மூன்று வகையாகப் பிரித்துப் பேசும் சைவசித்தாந்தம். . இறைவன் தன் பொருட்டு யாதொரு வடிவத்தையும் வேண்டாதவன்; ஆருயிர்களின் பயன் கருதியே இந்த மூவகை வடிவங்கனை 61. இயல். 2. கடிதம் 8-பக். (55-58)