பக்கம்:சைவமும் தமிழும்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 33 யும் மேற்கொள்ளுகின்றன. இறைவன் உலகை நோக்காது தன் நிலையில் நிற்கும்பெர்ழுது சிவன்’ என்று வழங்கப் பெறுவான். இதுவே சொரூப கிலை எனப்படும் உண்மை நிலையாகும். இந்நிலையில் அவன் பரமசிவன் சொரூப சிவன், சுத்தசிவன் என்றெல்லாம் பேசப்பெறுவன். இந்நிலையில் அவனது சக்தி பராசக்தி எனப் பெயர் பெறுகின்றது. இத் நிலையில் இறைவனுக்கு யாதொரு வடிவமும் இல்லை. இதுவே இவன் அருவ நிலை. இறைவன் இந்நிலையினின்றும் நீங்கி உலகத்தை நோக்கி ஐந்தொழில் புரியப் புகுமிடத்து சக்தி என்ற பெயரைப் பெறுகின்றான். விண்வெளியில் ஒளிரும் கதிரவன் மண்வெளியில் தன் ஒளிக்கதிரகளால் வியாபித்து நிற்பதைப் .ே பா ல ேவ, மேலிடத்திலுள்ளோனாகிய இறைவன் தனக்குக் கீழுள்ள உலகத்தில் தன் சக்தியினால் வியாபித்து நிற்கின்றான். இதுபற்றித்தான் இந்நிலையை சக்தி என்றே வழங்குகின்றனர் சித்தாந்திகள். ஒரு சக்தியே செயலால் பலவகையாகப் (சுடும் சக்தி, அடும் சக்தி, ஒளிரும் சக்தி முதலியவை) புலப்படுவது போலவே, இறைவனது சக்தியும் பல வகைகளில் புலப் பட்டு பல்வேறு பெயர்களைப் பெறுகின்றது. இறைவனது மேலான பராசக்தி உலகத்தை நோக்கும்போது ஆதிசக்தி என்ற பெயரைப் பெறுகின்றது. உலகத்தை இயக்கும் எல்லாச் சக்திகட்கும் இதுவே முதல் மூலமாக இருப்பதால் இப்பெயர் பெற்றது என்பதை அறிக. இச்சக்தி உயிர்கட்கு இறைவனைக் காட்டாமல், உலகத்தையே காட்டி அவற் றைப் பிறப்பு-இறப்புச் சுழலில் அகப்பட்டு உழலச் செய்வ தால் அது திரோதான சக்தி என்றும், திரோதாயி என்றும் வழங்கப்பெறும். திரோதானம்-மறைப்பது; திரோதாபி. மறைத்தலைச் செய்வது. இறைவன் உலகத்தை இயக்க அவனது பேராற்றலுள் ஒரு சிறிதே போதும். ஆகவே, பராசக்தியின் ஒருசிறு கூறே ஆதிசக்தி எனப்படும் திரோ தான சக்தியாக நிற்கும் என்பதைத் தெளிக. ஆதிசக்தி