பக்கம்:சைவமும் தமிழும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器碑 சைவ சமய விளக்கு 'பராசக்தியின் ஆயிரத்தில் ஒரு கூறு' என்று கூறுதல் சித்தாந்த மரபு என்பதையும் அறிக. ஆதி சக்தி செயற்படும்போது அது செயலாற்றுவதற்கு ஏற்ப விழையும் ஆற்றல், அறியும் ஆற்றல், செய்யும் ஆற்றல் என வேறு வேறு விதமாகப் புலப்படும். அங்கனம் புலப்படும்போது இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி" என மூன்றாகப் பிரியும். பின்னர் படைத்தல் சக்தி, காத்தல் சக்தி, அழித்தல் சக்தி முதலாக எண்ணிறந்த சக்திகளாக விரிந்து தொழில் செய்யும். சைவ ஆகமங்கள் அவற்றிற்கெல்லாம் பலவாறு பெயரிட்டு விரித்துக்கூறும், சக்திகள் எண்ணற்றவைகளாகச் சொல்லப்பெறினும், அவற்றுன் பராசக்தி, ஆதிசக்தி, இச்சாசக்தி, ஞான சக்தி, கிரியாசக்தி' என்றும் ஐந்துமே முதன்மையானவை. பாகும். இதனையே, k - ஒன்றதாய், இச்சா ஞானக் . கிரியையொன் றொருமூன் றாகி நின்றிடும் சக்தி; இச்சை உயிர்க்கருள் நேச மாகும்: நன்றெலாம் ஞான சக்தி பால்நயங் தறிவன் நாதன்: அன்றருட் கிளியை தன்னால் - ஆக்குவன் அகில மெல்லாம். என்று சிவஞான சித்தியார் பேசும். இங்ங்ணம் மேற்கூறிய சக்திகளைக் கொண்டே இறைவன் தனது தொழில்கள் அனைத்தையும் செய்கின் றான். இதனை, - 62. இச்சை-விருப்பம், இது உயிர்கட்கு நலம் செய்யவேண்டும். என விரும்பும் கருணைவாகும் ஞானம்-அறிவு. இது விரும்பிய வாறே நலம் செய்வதற்கு ஆவன அறிவதாகும். கிரியை.செயல், இஃது அறிந்தவாறே செய்வதாகும். - 3ே சித்தியார் 1.63.