பக்கம்:சைவமும் தமிழும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 85 கங்கையினால் நாம் அனைத்தும் செய்தாற்போல் காடனைத்தும் நங்கையினால் செய்தளிக்கும் காயகனும்.' - என்று மிக அழகாகக் கூறுகின்றது திருக்களிற்றுப்படியார். குணமும் குனியும் வேறல்லவாயினும், செலுத்துவது குணி, செலுத்தப்படுவது குணம். எனவே, குணி செலுத் தியபடியே குணம் செல்வதல்லது வேறாகச் செல்லாது. அதனால் சக்தி' மனைவி என்றும், சிவம் கணவன் என்றும் கொள்ளப்படுகின்றன. இதுபற்றிதான், மேற்குறித்த களிற்றின் பாடலில் சக்தி நங்கை’ என்றும், சிவம் "நாயகன்’ என்றும் கூறப்பட்டன என்பதைத் தெளிக. சிவபெருமான் தனது ஒரு பாதி ஆண் உருவாகவும், மற்றொரு பாதி பெண் உருவாகவும் உள்ளான என்று சொல்வதும், முதல்வன் ஒருவனே சிவமும் சக்தியும் என இரு திறப்பட்டு இயைந்து நிற்றலையே குறிப்பதாகும். மற்றும், சிவமூர்த்தங்கள் பலவும் அம்மை உடனாகக் காணப்படுவதும் இவ்வுண்மையை விளக்குவதாகும் என் பதையும் தெளிக. - இறைவனது ஐந்து தொழில்களையும் அருள் தொழில், களாகவே புரிகின்றான் என்பதை முன்னரே விளக்கி யுள்ளேன்." அவற்றை ஈண்டு நினைவு கூர் க. அவற்றை ஈண்டு மேலும் தெளிவுறுத்துவேன். குணம் குனி வழியே செயற்படுமாதலால் சக்தி சிவத்தின் வழியே நிற்பதாகும் என்பதை நீ நன்கு அறிவாய். இறைவன் அயனாய் நின்று படைத்தல் தொழிலைச் செய்ய நினையுங்கால் அவனது சக்தி வாணி என நிற்பாள். இறைவன் அரியாய் நின்று காத்தல் தொழிலைச் செய்ய நினையுங்கால் அவனது சக்தி திருமகளாய் நிற்பாள். இறைவன் அரனாய் நின்று அழித்தல் 84. களிறு.78 - 63. இயல்-2; கடிதம். சி. பக். (50-62)