பக்கம்:சைவமும் தமிழும்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சைவ சமய விளக்கு தொழிலைச் செய்ய நினைக்குங் கால், அவனது சக்தி உமையாய் நிற்பாள். மறைத்தலை இறைவன் மகேசுவரனாய் நின்று செய்யும்போது, அவனது சக்தி மகேசுவரியாய் វិជ្ជុវេរៈទាំ... இறைவன் கொள்ளுகின்ற உருவத் திருமேனிகள் யாவும் இம் மகேசுவர நிலையின் வேறுபாடுகளே. ஏகபாதர், அர்த்த நாரீசுவரர், உமாசகாயர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், நடராசர் முதலான மகேசுவர மூர்த்தங் கள் இருபத்தைந்து எனக் கணக்கிடப்பெற்றுள்ளன. மற்றும், அடியார்கட்கு ஆங்காங்குத் தோன்றியருளிய வடிவங்களும் பலவாகும். தேவர்கள் பொருட்டும், ஏனைய உலகத்தார் பொருட்டும் திரிபுரத்தை எரித்தது முதலியன வும் சனகாதி முனிவர்கட்குத் தட்சிணாமூர்த்தியாகப் இருந்து ஞானத்தை அருளியது முதலியனவும் இம் மகேசரி மூர்த்தமாதல் அறிந்து தெளிக, இறைவன் அருளலைச் சதாசிவனாய் நின்து செய்யும்பொழுது, அவனது சக்தி மனோன்மணியாய் நிற்பாள். இறுதியில் குறிப்பிட்ட நிலை செயலில் புகும் நிலையே யல்லது செயல் ஆற்றும் நிலை யன்று. அதனால் இது பொதுவாய் நின்ற அருவமும் ஆகாமல், பின்பு சிறப்பாய் வரும் உருவமும் ஆகாமல் அருவுருவத் திருமேனியாய் அமையும். இவ்வடிவமே ஒளிப்பிழம்பான சிவலிங்கத் திருமேனியாகும். அசேதனப் பிரபஞ்சமாகிய சட உலகத்தை இறைவன் படைத்துக் காத்து அழித்தல் ஆணவத்தின் சக்தியைத் தேய்த்ததற்கே யாகும் என முன்னரே விளக்கி யுள்ளேன். அம்முத்தொழிலில் அகப்பட்ட உயிர்கள் தம்மையும், தம் தலைவனாகிய இறைவனையும் தம்மைப் பற்றியுள்ள பாசத்தையும் அறிவதில்லை. ஆகவே, படைத்தல் முதலிய முத்தொழில்களும் மறைத்தல் தொழிலின் வகைகளா கின்றன. ஆணவத்தின் சக்தி சடசக்தியாதலால், அது செயற்படச் செயற்படத் தேய்ந்து தேய்ந்து மெலிவடை 66. இயல், 2; கடிதம். 9. பக் (60.521