பக்கம்:சைவமும் தமிழும்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் st பும். ஆணவத்தின் சக்தி மெலிவடைய மெலிவடைய உயிர்களின் அறிவு மறைப்பு நீங்கி விளக்கம் பெற்று இறைவனை அறிதற்கு உரியதாகும். ஆகவே, அந் நன்மை கருதியே இறைவன் மறைத்தல் தொழிலைச் செய் கின்றான். அதனால், அதுவும் உயிர்களின் நன்மையின் பொருட்டே ஆகிவிடுகின்றது. 'அருளல் என்பது ஆணவத்தின் சக்தி மெலியப்பெற்ற உயிர்கட்கு இறைவன் தன்னையும் உயிர்களையும், அவ் வுயிர்களைப் பற்றியுள்ள பாசங்களையும் நன்கு உணரு மாறு காட்டிப் பகையாகிய பாசத்தினின்றும் நீங்கி உறவாகிய தன்னை அடைந்து இன் புறச் செய்தலாகும். *முத்தி’ என்பது இதுவேயாகும் என்பதைத் தெளிக* பாசத்தைப் பசுக்கள் விட்டுப் பதியினை அடைதல் முத்தி." என்று கூறுவர் அருணந்தி சிவாச்சாரியார். இவ்வருளைப் புரியும் இறைவனது சக்தி அருட்சக்தி என வழங்கப்படும். இறைவனது ஒரு சக்தியே இங்ங்ணம் திரோதான சக்தி, அருட் சக்தி” என இரண்டாகி நின்று மறைத்தல், அருளல், என்னும் இரு தொழில்களைச் செய்யும். எனவே, *உடைத்தல், காத்தல், அழித்தல்' என்பவற்றுடன் "ைைறத்தல், அருளல்’ என்று இரண்டும் சேர்ந்து இறைவன் செய்யும் ஐந்தொழில்களாகின்றன என்பதை அறிவாயாக. இவற்றை முன்னரும் குறிப்பிட்டுள்ளேன்: ஐந்தொழில் பஞ்ச கிருத்தியம்’ என்றும் பேசப்பெறும். மேற்கூறப் பெற்ற ஐந்து தொழில்களும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றும் அசேதனப் 37. இது பற்றி பயணியிலில் தெளிவான விளக்கம் காட்டப் பெதும். - - 68. சித்தியார்-பரபக்கம் பாஞ்சராத்திரி மத மறுதலை-23. 59. இயல்-2; கடிதம்-9. பக். (60-62)