பக்கம்:சைவமும் தமிழும்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சைவ சமய விளக்கு பிரபஞ்சமாகிய சட உலகத்தின் மீதும், மறைத்தல், அருளல் ஆகிய இரண்டும் சேதனப் பிரபஞ்சமாகிய உயிர் களின்மீதும் செய்யப்படுவன வாதலாகும் என்பதை அறிந்து தெளிக. இந்த ஐந்து தொழில்களும் ஒருவகையில் அருள் தொழிலேயாகும்; எங்ஙனம்? என்பதைக் கூறுவேன்; உலகத்தை இறைவன் படைத்தல் உயிர்களின் வினை தீர்த்தற் பொருட்டு; காத்தல் வினைய நுகர்வித்தல் பொருட்டு; அழித்தல் இளைப்பு நீங்குதற் பொருட்டு; மறைத்தல் மலபரி பாகம் அடைதற் பொருட்டு; அருளல் பேரின்பத்தை அடைதற் பொருட்டு. இந்த விளக்கத்தை யும் உளங்கொள்வாயாக. இன்னும் ஒரு கருத்தையும் இவண் அறிந்து கொள்வது இன்றியமையாததாகின்றது. மறைத்தல் உயிர்கட்குப் பந்தத்தை (கட்டினை)ச் செய்வது: அருளல் உயிர்கட்கு வீட்டினை (விடுதலையை)த் தருவது. ஆகவே, ஐந்தொழில் களையும் பந்தம், வீடு என்று இரு தொழில்களாகவே அடக்கில் பேசப்பெறும் மரபும் உண்டு. படைத்தல் முதலிய மூன்றும் ஒருவகையில் மறைத்தலே யாகும் என்பதை முன்னரே கூறியுள்ளேன். பந்தம் வீடவை யாய பராயரன்' என்பது நாவுக்கரசரின் திருவாக்கு. பந்தமும் வீடும் படைப்போன் காண்க' என்பது வாதவூரடிகளின் மணி வாக்கு. - பந்தம் விடுதரும் பரமன்' என்பது சேக்கிழார் பெருமான் அதுபூதி நிலையில் கூறியது. பந்தம், வீடு என்ற கருத்து திருமுறைகளுள் பலவிடத்தும் 76. – 71. திருவா. திருவண்டப் பகுதி-அடி. 52 72. பெரியபுரா. தடுத்தாட் கொண்ட புராணம்-154